மேலும் அறிய

பெற்ற மகனே இட்லி மாவில் விஷம் கலந்து தாய் தந்தையை கொலை செய்ய முயற்சி

’’பெற்ற மகனே உணவில் விஷம் வைத்து எங்களை கொலை செய்ய சதி செய்துள்ளது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’’

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சிறுவை கிராமத்தை சேர்ந்த விவசாயி தம்புசாமி (78) இவரது மனைவி தனகோடியுடன் (70)  விஷம் கலந்த இட்லி மாவை எடுத்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எங்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் தமிழரசன் சென்னையில் வசித்து வருகிறார். எங்களுக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலம் எனது மனைவியின் பெயரில் உள்ளது. அந்த நிலத்தில் எங்களது 2 ஆவது மகன் மோகன்தாஸ் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.  இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் இருவரையும் சரியாக கவனிக்காமல் உணவு கூட அளிக்காமல் துன்புறுத்தி வருகிறார். மேலும் எங்கள் விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொடுக்கும் படி மோகன்தாஸ் கேட்டு கடந்த ஒரு வாரமாக எங்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தி வருகிறார்.

Local Body Election | ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்றுதான் திமுக பரப்புரை செய்தது - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

பெற்ற மகனே இட்லி மாவில் விஷம் கலந்து தாய் தந்தையை கொலை செய்ய முயற்சி

இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், எங்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தினார். ஆனால் அதற்கு மறுத்து நாங்கள் எங்களுடைய வீட்டிலேயே இருந்தோம். இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு இட்லி தயார் செய்வதற்காக தனகோடி, மாவினை எடுத்து வந்தார். அப்போது மாவின் நிறம் நீல நிறமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்,

பெற்ற மகனே இட்லி மாவில் விஷம் கலந்து தாய் தந்தையை கொலை செய்ய முயற்சி

இதுபற்றி மோகன்தாசிடம் கேட்டதற்கு சொத்துக்களை எனக்கு  எழுதி தராத நீங்கள் எதற்காக உயிரோடு இருக்க வேண்டுமென கூறியதோடு மாவில் பூச்சி மருந்தை கலந்ததாகவும் கூறினார்.  சொத்துக்காக பெற்ற மகனே உணவில் விஷம் வைத்து எங்களை கொலை செய்ய சதி செய்துள்ளது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த சம்பவத்தினால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget