விழுப்புரம் அருகே ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு; 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை
கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாராயணசாமி என்ற ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ஐந்து பேரை தாலுகா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் ரயிலடி வாயிலில் உறங்கி கொண்டிருந்தவர்களிடம் ரவுடி ஒருவர் வம்பிழுத்து நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள கண்டாம்பாக்கத்தை சார்ந்த நாராயணசாமி என்ற ரவுடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் சண்டையிடுவது கையில் கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நாராயணசாமியால் 5 பேர் பாதிக்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர்களை மிரட்டி வழக்குகளை வாபஸ் செய்துள்ளனர். கண்டம்பாக்கத்தில் ரவுடீசம் செய்து வரும் நாராயனசாமியுடன் அப்பகுதி மக்கள் பேச்சுவார்த்தை வைத்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நான்கிற்கும் மேற்பட்டோர் படுத்திருந்துள்ளனர். அப்போது அங்கு போதையில் வந்த நாராயணசாமி ரயில் நிலத்தில் படுத்திருந்தவர்களிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். அப்போது இந்த ஊரில் என் மீதிருந்த பயம் எல்லோரிடத்திலும் போய்விட்டதா என கூறி ரயில் நிலையத்தில் படுத்திருந்தவர்கள் பகுதியில் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். இதில் அங்கு படுத்திருந்த பரணிதரன் என்பவர் முகத்தில் பாடுகாயம் அடையவே அங்கிருந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் பரணிதரனை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து சம்பவ இடத்தில் விசாரனை செய்தனர். மேலும் விழுப்புரம் தாலுகா போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு துகள்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். விசாரனையில் கண்டம்பாக்கத்தை சார்ந்த ரவுடியான நாராயணசாமிக்கும் பரணிதரனுக்கும் முன் விரோதம் இருந்தது, ஊரில் நாராயணசாமியை கண்டு அனைவரும் அஞ்ச வேண்டும் என்பதற்காக நண்பர்களுடன் போதையில் நாட்டு வெடிகுண்டி தயார் செய்து வீசியது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டு வெடிகுண்டு வீசிய பரணிதரன், அவரது நண்பர்கள் வசந்தகுமார், தமிழரசன், மாதேஷ், குண்டால், கணேஷ் ஆகிய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
Electric Car Fire: பெங்களூரில் குபுகுபுவென எரிந்த எலக்ட்ரிக் கார்; வைரலாகும் வீடியோ
Aditya L1: 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை தாண்டி பயணித்து வரும் ஆதித்யா - இஸ்ரோ அசத்தல்