மேலும் அறிய

அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை - முக்கிய ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல்

அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை - முக்கிய ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம்: அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய  ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் ஆசிரமத்தில் சேர்க்கப்படுவர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும் புகார்கள் வந்தன.

திருப்பூரை சார்ந்த வயதான முதியவர் ஜபருல்லாவை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது மருமகன் சலீம்கான் அமெரிக்காவில் இருந்து கொண்டு தனது நண்பர் ஹாலிதின் என்பவர் மூலம் குண்டலப்புலியூரில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஜபருல்லாவை சேர்த்துவிட்டார். அதன்பின் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய சலீம்கான் தனது மாமாவை பார்க்க சென்றபோது அங்கு இல்லை என்பதாலும், உரிய பதில் அன்பு ஜோதி அறக்கட்டை நிர்வாகியிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட சலிம்கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தாக்கலின் படி விசாரனை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் உரிய விசாரனை செய்ய கெடார் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 10 ஆம் தேதி அன்பு ஜோதி அறக்கட்டளையில் ஆய்வு செய்தபோது 15க்கும் மேற்பட்டோர் அறக்கட்டளையிலிருந்து காணாமல் போய் இருந்ததும் ஆசிரமத்தில் இருந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கபட்டு கொடுமை படுத்தப்பட்டது போலீசார் விசாரனையில் தெரியவந்தது. மேலும் ஆசிரமம் உரிய அனுமதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்ததது தெரியவரவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார்  ஆசிரமத்தில் இருந்து 86 பேரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆசிரமத்தின் உரிமையாளர் ஜீபின் மற்றும் நிர்வாகத்தை சார்ந்த பியூ மோகன், அய்யப்பன், முத்துமாரி, கோபிநாத் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி மற்றும் எஸ் பி ஸ்ரீநாதா ஆகியோர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த ஆட்சியர் சி.பழனி, விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அறக்கட்டைகள் குறித்து கணக்கெடுத்து உரிமம் இல்லாமல் செயல்படும் அறக்கட்டைகளை மூடவும் அன்பு ஜோதி அறக்கட்டளையை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அன்பு ஜோதி அறக்கட்டளையில் போலீசார் விசாரனையில் அதன் உரிமையாளர் ஆசிரமத்திலிருந்தவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி உள்ளதும் அடிப்படை வசதிகள் இல்லாமல் கொடுமை படுத்தியதும் தெரியவந்துள்ளதால் சட்டபடி நேர்மையான முறையில் தீவிர விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

இதைதொடர்ந்து இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விக்கிரவாண்டி வட்டாட்சியர் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் அதிரடி சோதனை செய்தனர்.  அப்போது ஆசிரமத்தின் ஒவ்வொரு அறையையும் தீவிரமாக சோதனை செய்ததில் அங்கு ஏராளமான மருந்துகள், மாத்திரைகள் இருந்தது. உடனே இதுபற்றி, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விழுப்புரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத்துறை முதுநிலை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தீபா, சுகன்யா ஆகியோர் அங்கு விரைந்து வந்து ஆசிரமத்திலிருந்த மருந்துகளின் பயன்பாடு என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து பட்டியலிட்டனர்.

3 மணி நேரம் நடந்த இந்த சோதனையின்போது ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் ஆகிய இருவரின் பாஸ்போர்ட் மற்றும் 10 செல்போன்கள், 1 லேப்டாப், 1 கம்ப்யூட்டர், மருந்து, மாத்திரைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பலவற்றை பறிமுதல் செய்து அதனை மூட்டை, மூட்டையாக கட்டி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மட்டும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற பொருட்கள் அனைத்தும் கெடார்காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த சோதனை முடிந்த பின்னர் அந்த ஆசிரமத்தின் கதவுகளை வருவாய்த்துறையினர் பூட்டுப்போட்டு பூட்டி சாவியை கெடார் போலீசில் ஒப்படைத்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
TN Rain Alert: அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Embed widget