மேலும் அறிய

மளிகை கடையை விரிவாக்கம் செய்வதாக கூறி 25 பேரிடம் 1.5 கோடி மோசடி - தப்பியோடிய ஓனரை மடக்கி பிடித்த போலீஸ்

மளிகை கடையை விரிவாக்கம் செய்ய கடன் பெற்று 25 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி வாலிபர் கைது

விழுப்புரம் கே.கே.சாலை மாந்தோப்பு தெரு பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி சுதா. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் மகாராஜபுரத்தில் மதுரை மாவட்டம் குருவப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் நடத்தி வந்த தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் கணினி இயக்குபவராக 2 மாதங்கள் சுதா பணியாற்றினார். அப்போது பால்ராஜ் மகன் தங்கபாண்டியன் (35) என்பவர் சுதாவுக்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சுதாவை, தங்கபாண்டியன் சந்தித்துள்ளார். அப்போது அவர் தான், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், கடை நல்ல முறையில் நடப்பதாகவும் சுதாவிடம் கூறியுள்ளார்.

அதன் பிறகு சுதா, சில நாட்கள் கழித்து அந்த மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தங்கபாண்டியன், அவரது மனைவி சரண்யா, சகோதரர்கள் கடற்கரைலிங்கம், குமாரவேல் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது அவர்கள், இந்த மளிகை கடையை விரிவுப்படுத்த பணம் தேவைப்படுவதாகவும், அந்த பணத்தை தருமாறும் சில மாதங்கள் கழித்து வட்டியுடன் திருப்பி தருவதாகவும் சுதாவிடம் கேட்டுள்ளனர். இதை நம்பிய சுதா கடந்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது வங்கி கணக்கு மூலமாக தங்கபாண்டியனுக்கு 17.70 லட்சத்தை அனுப்பினார். பணத்தை பெற்ற தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும், சில மாதங்கள் கழித்து சுதாவுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றினர்.

மளிகை கடையை விரிவாக்கம் செய்வதாக கூறி 25 பேரிடம் 1.5 கோடி மோசடி - தப்பியோடிய ஓனரை மடக்கி பிடித்த போலீஸ்

பலமுறை அவர் வற்புறுத்தியும் பணத்தை திருப்பித்தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த சூழலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர்கள் 4 பேரும் மளிகை கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதேபோல் அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வாடிக்கையாளர்களாக வந்து பொருட்கள் வாங்கிச்சென்ற விழுப்புரம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கடையை விரிவாக்கம் செய்ய கடனாக 1.50 கோடி வரை பணம் பெற்று திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர்.

மளிகை கடையை விரிவாக்கம் செய்வதாக கூறி 25 பேரிடம் 1.5 கோடி மோசடி - தப்பியோடிய ஓனரை மடக்கி பிடித்த போலீஸ்

இதுகுறித்து சுதா உள்பட பாதிக்கப்பட்ட 25 பேர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தங்கபாண்டியன், சரண்யா, கடற்கரை லிங்கம், குமாரவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும்  தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற தங்கபாண்டியனை, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். மேலும் சரண்யா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
Embed widget