விழுப்புரத்தில் பரபரப்பு... காத்திருந்து காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் - நடந்து என்ன?
விக்கிரவாண்டி அருகே அதிகாலைவிடியல் எப்போது பிறக்குமென்று காத்திருந்து காதலியின் கழுத்தறுத்து கொலை செய்த காதலன்
![விழுப்புரத்தில் பரபரப்பு... காத்திருந்து காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் - நடந்து என்ன? Villupuram crime news lover who killed his girlfriend by slitting her throat near Villupuram TNN விழுப்புரத்தில் பரபரப்பு... காத்திருந்து காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் - நடந்து என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/2e89a2b4d030a8659e288597738c79811679022690422194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அதிகாலை விடியல் எப்போது பிறக்குமென்று காத்திருந்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளாது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் காலனியை சார்ந்த தரணி என்ற பயிற்சி செவிலியரும் மதுரப்பாக்கத்தை சார்ந்த கணேசன் என்ற இளைஞரும் கடந்த மூன்று வருடமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே காதலை கண்டித்து இளைஞருக்கு திருமணம் செய்து தரமுடியாது என பெண்ணின் தந்தை மறுத்துள்ளார். இதனால் காதலர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்படவே இளம் பெண் காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த கணேசன் நேற்றைய தினம் தனது காதலியான தரணியிடம் தொலைபேசியில் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலனான கணேசன் பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள முட்புதர் பகுதியில் அதிகாலை நேரத்தில் மறைந்திருந்து காதலி வீட்டைவிட்டு எப்போது வெளியே வருவாள் என பெண்ணின் வீட்டிற்கு அருகிலேயே மறைந்து காத்திருந்துள்ளார்.
காலையில் காலை கடனை முடிப்பதற்காக காதலி தரணி வீட்டை விட்டு வெளியே முட்புதர் பகுதிக்கு வந்தபோது மறைந்த காதலன் காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். காதலியின் வீட்டிற்கு அருகிலுள்ளவர்கள் காலை கடனை முடிப்பதற்காக முட்புதர் பகுதிக்கு சென்ற போது தரணி ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ள விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளம்பெண்னை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த காதலனை தேடி வருகின்றனர். இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)