மருத்துவமனைக்கு அழைத்து வந்த ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை; விடுதி மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது!
விழுப்புரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கட்டட மேஸ்திரியான மணிகண்டனை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு ப்ளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். அந்தப் பெண் கட்டட வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் புதுச்சேரியை சேர்ந்த கட்டட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் உடன் வேலை செய்து வந்துள்ளார். மாணவிக்கு சில தினங்களாக உடல்நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மகளை கட்டட மேஸ்திரியான மணிகண்டனுடன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Seeman Speech: மாரிதாஸ் விவகாரம்! சங்கி திமுக! கடுப்பான சீமான்
விழுப்புரத்தில் உள்ள மருத்துவ மனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மாணவியும் மணிகண்டனும் சினிமாவுக்கு சென்றுள்ளனர். திரையரங்கில் இருந்து திரும்பி வரும் போது மாணவி மயக்கம் வருவதாக கூறியுள்ளார். அருகில் உள்ள விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
Anbil Mahesh: மேயராகிறாரா உதயநிதி? பதிலளித்த அன்பில் மகேஷ்
விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருந்த விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று அங்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். மாணவி மயக்க நிலையில் இருந்த போது சிறுமி என்றும் பாராமல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
அதனை தொடர்ந்து அந்தப் பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கட்டட மேஸ்திரியான மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு விடுதியில் அறை ஒதுக்கித் தந்த மேலாளர் தணிகைவேலுவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போக்சோ சட்டம் பற்றிய தகவல் :
சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் நோக்கத்துடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு நீதிமன்றம் குறைந்தபட்சம் மூன்று வருட தண்டை அல்லது அதிகபட்சம் 5 வருடம் வரை தண்டனை கொடுக்கும்.
மேலும், அபராதமும் விதிக்கப்படலாம். பிரிவு 3ன் படி, சிறார்களை வன்கொடுமை செய்தாலோ, வேரோரு நபரை வைத்து செய்ய தூண்டினாலோ, குழந்தையின் உடலின் எந்தப் பகுதியிலும் ஊடுருவலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டாலோ அது பாலியல் வன்கொடுமை என்று கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்காக ஒருவருக்கு குறைந்தபட்சம் 7 வருட சிறை தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரையிலும் நீதிமன்றம் கொடுக்கும். ஒரு குழந்தைக்கு கார்டியனாக இருப்பவர் அல்லது குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்களே அக்குழந்தையை வன்கொடுமை செய்தால் பிரிவு 5ன் படி நீதிமன்றம் தண்டனை கொடுக்கும்.
உதாரணமாக, குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் வன்கொடுமை, காவல் நிலையத்தில் சிறார்களுக்கு நடக்கும் வன்கொடுமை, ராணுவத்தினரால் சிறார்களுக்கு ஏற்படும் வன்கொடுமை, கோரமான முறையில் நடக்கும் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துவது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் வன்கொடுமை செய்வது போன்ற குற்றங்கள் இந்த பிரிவில் அடங்குகிறது. இதனால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 வருடம், அதிகபட்சம் ஆயுள்தண்டனை வரையிலும் கொடுக்கலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்