என்னடா பெரிய ராயல் என்ஃபீல்டு? - 15 செகண்ட்ஸ் தான்! அபேஸ் செய்த அல்டிமேட் திருடன்!
ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு பைக்கை திருடன் ஒருவன் 15 செகண்டில் லாக்கை ஓபன் செய்து ஸ்டார்ட் பண்ணி ஓட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு பைக்கை திருடன் ஒருவன் 15 செகண்டில் லாக்கை ஓபன் செய்து ஸ்டார்ட் பண்ணி ஓட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்த ஒருவர் அசல் சாவி இல்லாமல் பைக்கை திறந்து தப்பிச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. இந்த சம்பவம் திங்கள்கிழமை அதிகாலையில் நடந்ததாக கூறப்படுகிறது.
26 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், ஸ்வரூப் சதுக்கப் பகுதியில் பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கடைக்கு வெளியே முகமூடி அணிந்த நபர் இந்த வேலையை செய்துள்ளார்.
வீடியோவில் உள்ள நபர் பூட்டில் கூர்மையான இரும்புப் பொருளைச் செருகி அதை உடைத்ததாகக் கூறப்படுகிறது. திருடன் ராயல் என்ஃபீல்ட் பைக்கைத் திறப்பதைக் காணலாம். பின்னர் திருடன் என்று கூறப்படும் நபர் பைக்கில் அமர்ந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார். கொள்ளை சம்பவம் வெறும் 15 வினாடிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
பைக்கின் உரிமையாளர் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை. உடனே அவர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது இந்த நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து புல்லட்டின் உரிமையாளர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதோடு சிசிடிவி காட்சிகளும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
चोर आया, लोहे की नुकीली कील जैसी चीज लॉक में घुसाई, लॉक तोड़ा, बैठा और बुलेट मोटरसाइकिल लेकर भाग निकला। ये सब सिर्फ 15 सेकेंड में हुआ। दो, ढाई, तीन लाख रुपए की बाइक में क्या यही सिक्योरिटी सिस्टम है?
— Sachin Gupta (@SachinGuptaUP) April 7, 2025
📍जिला मुजफ्फरनगर, उत्तर प्रदेश pic.twitter.com/BOi4wiNbIY
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். பலர் இந்த விலையுயர்ந்த பைக்கின் பாதுகாப்பு தன்மையை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வீடியோவில் உள்ள பைக் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 மாடல் ஆகும். இதன் மதிப்பு ரூ.2,25,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் 13 லிட்டர் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 41.55 கிமீ மைலேஜ் தருகிறது. இந்த சம்பவம் இந்த விலையுயர்ந்த இரு சக்கர வாகனத்தின் பாதுகாப்பு அமைப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

