Crime: ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1.22 கோடி மோசடி - இருவர் கைது
வேலூர் பகுதியை சேர்ந்த ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக போலி ஆவணம் வழங்கி 57 பேரிடம் ஒரு கோடியே 22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது. ஒருவர் தலைமுறைவு
வேலூர் பகுதியை சேர்ந்த ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக போலி ஆவணம் வழங்கி 57 பேரிடம் ஒரு கோடியே 22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவானவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். வேலூர் அரியூர் பகுதியை சேர்ந்வர், முன்னாள் இராணுவ வீரர் மூர்த்தி வயது (51), அணைக்கட்டு அருகே உள்ள மருதவள்ளிப்பாளையத்தை சேர்ந்த பாபு. இவர் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் (சி.ஆர்.பி.எஃப்) பணியாற்றியவர் எனக் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து, ராணுவத்தில் வேலை வாங்கித்தருவாகக் கூறி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருந்திருகிறார்கள். வேலை கேட்கும் இளைஞர் ஒருவருக்கு ரூபாய் 3 லட்சத்தில் இருந்து ரூபாய் 4 லட்சம் வரை பேரம்பேசி வசூலித்திருக்கிறார்கள்.
பல்வேறு ஊரை சேர்ந்த ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள நபர்கள் 57 பேரிடம் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் சுமார் 1 கோடியே 22 லட்சம் வரையில் பணம் பெற்று வேலை வாங்கி தருவதாக பல்வேறு பொய்களை கூறிவந்துள்ளனர். இவர்களுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் தரகராக திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முன்னால் இராணுவ வீரர் சம்பத்குமார் வயது (60), பணம் வழங்கிய இளைஞர்கள் பணி நியமன ஆணை அல்லது பணத்தை திருப்பி கொடுக்கள் என்று இளைஞர்கள் தொடர்ந்து கேட்டுள்ளனர். இதனால் ஏமாற்றுவதற்காக வடமாநிலங்களிலிருந்து அனுப்பியதைப்போன்ற பணி நியமன ஆணைகளை போலியாகத் தயாரித்தும் கொடுத்துள்ளனர். இந்த மோசடி கும்பல், அவை போலியானது' என்பதைக் கண்டறிந்தப் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை இளைஞர்களுக்கு தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அவர்களிடம் இளைஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர். போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்ததாக வந்த புகாரை அடுத்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா உத்தரவு பேரில் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மூர்த்தி மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். காவல்துறையினர் விசாரணை முடிந்த பிறகு முன்னாள் ராணுவ வீரர்கள் மூர்த்தி மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரையும் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் வழங்கிய போலி ஆவணங்கள் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் ராணுவ முகாமில் இருந்து பணி ஆணை வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இவ் வழக்கில் தொடர்புடைய தலை மறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.