மேலும் அறிய

பெண் போலீஸிடம் போதையில் ‘அட்ரா சிட்டி’ செய்த தலைமை காவலர் - எஸ்பி எடுத்த அதிரடி நடவடிக்கை

வேலூரில் குடிபோதையில் தலைமை காவலர், பெண் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ளா தனியார் பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் திருத்தப்பட்ட 3 முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இது குறித்த முதல் கட்ட பயிற்சி முகாம் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் பாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் இருந்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இப்பயிற்சியில்  கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு காலை மற்றும் மாலை என இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காட்பாடி காவல் நிலைய தலைமை காவலர் கோபி என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார்.


பெண் போலீஸிடம் போதையில் ‘அட்ரா சிட்டி’ செய்த தலைமை காவலர் - எஸ்பி எடுத்த அதிரடி நடவடிக்கை

 

போலீசார் பயிற்சி வகுப்பில் போதையில் தள்ளாடிய தலைமை காவலர் 

மேலும் காவல் ஆய்வாளர் பாரதி, புதிய சட்டங்கள் தொடர்பான கேள்வியை எழுப்பியபோது அவரிடம் தலைமை காவலர் கோபி அநாகரீகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெண் ஆய்வாளரிடம் அவர் பேசிய விதம் அங்கு வந்திருந்த காவலர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியது . இதையடுத்து, தலைமை காவலர் கோபிக்கு விளக்க நோட்டீஸ் வழங்க காவல் ஆய்வாளர் பாரதி முயன்றுள்ளார். இதை அறிந்த சில காவலர்கள் கோபியை அங்கிருந்து வெளியே சென்று விடும்படி ஜாடை காட்டியுள்ளனர். அவரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது விரட்டிச்சென்ற சில காவல் அதிகாரிகள் தலைமை காவலர் கோபியை மடக்கிப்பிடித்தனர். பின்னர் மது போதையில் இருந்த தலைமை காவலர் கோபியை காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். 


பெண் போலீஸிடம் போதையில் ‘அட்ரா சிட்டி’ செய்த தலைமை காவலர் - எஸ்பி எடுத்த அதிரடி நடவடிக்கை

 தலைமை காவலர் பணியிடை நீக்கம்  

அவர் மதுபோதையில் இருந்ததற்கான சான்று பெறுவதற்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது தலைமை காவலர் கோபி அடிக்கடி மருத்துவ விடுப்பில் பணிக்கு சென்று விட்டு பணிக்கு வருவதில்லை என்றும், அப்படியே பணிக்கு வந்தால் அவர் மது பாதையில் இருப்பார் எனவும், இவர் மீது ஏற்கெனெவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. அவர் ஆயுதப்படை பெண் காவலர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இப்போது, பயிற்சி வகுப்பில் மதுபோதையில் இருந்ததுடன் பெண் காவல் ஆய்வாளரிடம் அநாகரீகமாக பேசி நடந்துகொண்டுள்ளார் என சக காவலர்கள் கூறுகின்றனர். மேலும் குடிபோதையில் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் அட்ரசிட்டி செய்த காட்பாடி தலைமை காவலர் கோபியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget