மேலும் அறிய

ராணிப்பேட்டை: கார்ல ஏறுங்க.. லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி 2 பெண்களிடம் 10 சவரன் நகை கொள்ளை!

மேம்பாலம் சீரமைக்கும் இடத்தில வாகனங்கள் ஊர்ந்து போகவே , இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுஜாதா ஓடும் காரிலிருந்து வெளியே குதித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகா ரெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன். மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுஜாதா (வயது 45). இவருடைய உறவினர் சென்னையைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி சிவபூஷணம் (வயது 67). இவர்கள் இருவரும் குடியாத்தம் அருகே ரோஸ் பேட்டையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தனர். பஸ் நிலையத்திற்கு வெளியே பேருந்துக்காக காத்திருந்த இவர்களிடம் சிவப்பு நிற காரில் வந்த ஒருவர் எங்கு செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார். 

 


ராணிப்பேட்டை: கார்ல ஏறுங்க.. லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி 2 பெண்களிடம் 10 சவரன் நகை கொள்ளை!


அப்போது சுஜாதா குடியாத்தம் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக காத்திருக்கின்றோம் என்று பதிலளித்துள்ளார் உடனே அந்த அடையாளம் தெரியாத டிரைவர்  நான் பள்ளிகொண்டா தாண்டி செல்கிறேன். பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தங்களை இறக்கி விடுகிறேன். அங்கிருந்து குடியாத்தத்துக்கு எளிதாக நீங்கள் செல்லலாம். எனக்கு ரூ.150 கொடுத்தால் போதும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பி சுஜாதாவும், சிவபூஷணமும் காரில் எறியுள்ளனர் .


சோளிங்கரில் இருந்து வாலாஜா, வேலூர் வழியாக பள்ளிகொண்டா நோக்கி கார் சென்றது. வேலூர் நகர எல்லையை தாண்டிய பின்னர் திடீரென அந்த அடையாளம் தெரியாத கார் டிரைவர் ஒருகையில் காரை ஓட்டிக்கொண்டே சிவபூஷணத்தின் கழுத்தில் இருந்த  தங்கச்சங்கிலியை பறித்தார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் சுஜாதாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியையும் பறிக்க முயன்றார். ஆனால் அவர் அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நகையை பாதுகாக்க போராடினார். இருவரும் காரில் இருந்தபடியே தங்களுக்கு உதவுமாறு காரின் ஜன்னல்களை தட்டி கூச்சலிட்டுள்ளனர் .

பள்ளிகொண்டா சுங்கச்சாவடிக்கு சென்றால் எளிதில் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய அந்த கொள்ளையன்  ,  காரை திருப்பி மீண்டும் நெடுஞ்சாலையிலேயே வேலூர் நோக்கி வந்தார். காரில் வந்து கொண்டிருந்தபோது சுஜாதா, சிவபூஷணம் இருவரிடமும் கழுத்தில், கைகளில் உள்ள அனைத்து நகைகளையும் கொடுத்து விடுங்கள் ! இல்லை என்றால் இருவரையும் காரிலேயே கொலை செய்து நகையை பறித்துவிடுவேன்!!  என்று அச்சுறுத்தியுள்ளான் . இதனால் இருவரும் செய்வதறியாது திகைத்தனர்.


ராணிப்பேட்டை: கார்ல ஏறுங்க.. லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி 2 பெண்களிடம் 10 சவரன் நகை கொள்ளை!

அப்போது காரை ஓட்டியவாறே சிவபூஷணத்தை தாக்கி அவரது கைகளில் அணிதிருந்த  வளையல்களை பறித்தான் .  இதற்கிடையே கார் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்திற்கு வந்தது. சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தில் ராட்சத டிரெய்லர் லாரிகள் நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றது. இதனை போக்குவரத்து போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் சுதாரித்துக்கொண்ட டிரைவர் எப்படி தப்பிப்பது என யோசித்தபடியே காரை மெதுவாக ஓட்டி வந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுஜாதா காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்தார். சாலையில் உருண்டு விழுந்து அவர் அலறி கூச்சலிட்டார். அந்த நேரத்தில் காரில் இருந்த சிவபூஷணமும் கைகளை வெளியே நீட்டி பொதுமக்களிடம் உதவி கேட்டார். இதனால் அந்த டிரைவர் சிவபூஷணத்தை ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு காரை ஓட்டினார்.

இருவரும் காரில் இருந்து விழுந்ததை பார்த்த அக்கம்பக்கத்தில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்தனர். உடனடியாக அங்கிருந்த போக்குவரத்து போலீசார் காரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். அனால் காரை மின்னல் வேகத்தில் ஓட்டி தப்பித்துக்கொண்டான் அந்த கொள்ளையன் .
 
காரில் இருந்து விழுந்த 2 பெண்களுக்கும் தலை, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருவரையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் காரில் வந்த மர்ம நபர் லிப்ட் கொடுப்பது போல நடித்து, தங்களை தாக்கிவிட்டு 10 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டதாக இருவரும் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget