மேலும் அறிய

Crime : எந்த ஊர் பெருசு? 10-ஆம் வகுப்பு மாணவர் அடித்துக்கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? திருச்சியில் பரபரப்பு..

'எந்த ஊர் பெரிய ஊர்’ என இவர்களுக்குள் சண்டை வந்ததில்தான் இச்சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினருக்கு முதல் கட்ட தகவல் விசாரணையில் கிடைத்துள்ளது

திருச்சி மாவட்டம்,  தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் தொட்டியம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, கார்த்திகைபட்டி, மகேந்திரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.  இந்த நிலையில் நேற்று மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிந்தனர். அப்போது, மாணவர்கள் சிலர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

தொடர்ந்து அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய மவுலீஸ்வரன் அருகே இருந்த மரத்தில் முட்டி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் மாணவர் அலறி துடித்தார்.

Crime : எந்த ஊர் பெருசு? 10-ஆம் வகுப்பு மாணவர் அடித்துக்கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? திருச்சியில் பரபரப்பு..

இதனை தொடர்ந்து மாணவரின் அலறல் சத்தத்தை கேட்டு விரைந்து வந்த ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மவுலீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் பள்ளி முன்புள்ள திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை தனியாக அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகளை போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் இறப்பு குறித்து போலீசார், முசிறி கல்வி மாவட்ட அதிகாரி முத்துசெல்வன் மற்றும் அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்-ஆசிரியைகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget