மேலும் அறிய

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருகின்றனர், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய வருவாய் நுண்ணறிவு அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்டு தங்கம் கடத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அதிக அளவில் தங்கத்தின் தேவை ஏற்பட்டுள்ள காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் தங்க நகைகளை வாங்குவதிலும் நகை கடைகளை அதிக அளவில் பொதுமக்கள் நாடிவந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவில் 995 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 67.42 லட்சம் என தெரிய வருகிறது. இதேபோன்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது இவரை அழைத்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் நகை வடிவில் மறைத்து எடுத்து வந்த 94 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 47.75 லட்சம் ஆகும். இதையடுத்து அவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூபாய்1.08 கோடி மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

மேலும் இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது.. சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு பிட் தங்கத்தைக்கூட கடத்திவர முடியாது. ஆனால், திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கத்தைக் கடத்திவருகிறார்கள். இது எப்படிச் சாத்தியம் என கேள்வி எழுப்பினர். மேலும் பல சிறப்புகளைக்கொண்ட விமான நிலையம், தற்போது தங்கம் கடத்திவரும் கூடாரமாக மாறியிருக்கிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானச் சேவைகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஒவ்வொரு விமான நிலையத்திலும் அதிநுட்பமான ஸ்கேனர் இருக்கிறது. அது மனித உடலிலுள்ள நரம்புகள் முதல் தசைகள் வரையிலும் ஸ்கேன் செய்யும் வல்லமைகொண்டது.ஆனால், இங்கு கிலோ கணக்கில் தங்கம் சர்வ சாதாரணமாக வெளியே வருகிறது என்றால் எப்படிச் சாத்தியம்? கஸ்டம்ஸ் அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் கடத்தல் தங்கம் வெளியே வர வாய்ப்பே இல்லை. இதுவும் பிரச்னைகள் நடந்த பிறகுதான் நமக்குத் தெரியவருகிறது. இதுபோல் எத்தனை கிலோ தங்கம் வெளியே சென்றது என்று தெரியவில்லை. தங்கத்தைக் கடத்தி வருவதற்குத் திருச்சியில் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. என தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Embed widget