TN Spurious Liquor Death: மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் வழக்கில் 68 பேர் கைது, 5470 லிட்டர் சாராயம் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் வழக்கில் 68 பேர் கைது, 5470 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் பிரபல ரவுடி வீட்டில் நாட்டு வெடிக்குண்டு வெடித்த சம்பவம் குறித்தும் ஐஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளசாராயம் அதில். வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக சிறப்பு தனிப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது. குடித்ததில் 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளசாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டிகள், சாராயம் விற்பவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் உள்ள 14 காவல்நிலைய சரகங்களில் கள்ளசாராயம், மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 5470 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டில் தற்போது வரை மாவட்டத்தில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்திற்கு அருகே உள்ள மாவட்டம் என்பதால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வருவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Drugs in TN: தமிழகத்தில் பலவித போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது - ஜி.கே.மணி குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி மாநிலத்தை இணைக்கும் எல்லை சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், கள்ளச்சாராயம் விற்பனை செய்வர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஐஜி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை அருகே பண்டாரவடை கிராமத்தில் கடந்த 13 -ஆம் தேதி பிரபல ரவுடி கலைவாணன் தனது வீட்டிலேயே வெடிக்குண்டு தயாரிக்கும் போது வெடிக்குண்டு வெடித்ததில் இரண்டு கைகளில் பத்துவிரல்களும் சிதறி படுகாயம் அடைந்தார். அவரது வீட்டில் இரண்டு நாட்டு வெடிக்குண்டுகள் மற்றும் நாட்டு வெடிக்குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களை காவல்துறையினர் கைப்பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், யாரை கொலை செய்ய நாட்டு வெடிக்குண்டு தயாரிக்கப்பட்டது என்றும், குடிசை தொழில் போன்று எப்படி நாட்டு வெடிக்குண்டு தயாரிக்கப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நண்டலாறு, குமாரமங்கலம், நல்லடை, உள்ளிட்ட அனைத்து எல்லை சோதனை சாவடியில் பாதுகாப்பு குறித்தும், சிசிடிவி பதிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்