மேலும் அறிய

நெல்லை: மானூரில் நள்ளிரவில் பரிதாபம்: கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்த வாலிபர்! தற்கொலையா?

வாலிபர் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோயிலுக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள களக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி. இவருக்கு லெட்சுமி என்ற மனைவியும், பாலகிருஷ்ணன் என்ற பாலா(வயது 30) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பால்சாமி இறந்துவிட்ட நிலையில், பாலிடெக்னிக் படித்து முடித்திருந்த பாலகிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அப்பகுதியில் மடத்தூர் சாலையில் உள்ள அய்யனார் சாஸ்தா கோவில் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பாலகிருஷ்ணன் உடல் அருகே கத்தி ஒன்று கிடந்தது. கோவில் முன்பு பத்தி, சூடம் உள்ளிட்டவை ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பாலகிருஷ்ணன் வந்து கோவில் முன்பு இறங்கியதும், அவர் கையில் ஒரு பை கொண்டு வந்ததும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து அவர் கோவிலுக்குள் செல்லும் காட்சிகள் வரை அதில் தெளிவாக தெரிந்தது.


நெல்லை: மானூரில் நள்ளிரவில் பரிதாபம்: கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்த வாலிபர்! தற்கொலையா?

மேற்கொண்டு உள்ள காட்சிகள் அந்த கேமிராவில் பதிவாகவில்லை. இறந்து போன பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்த தடயங்களை பார்க்கும்போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்த முழுவிவரமும் தெரியவரும். இதனிடையே அவர் நள்ளிரவில் எதற்காக கோவிலுக்கு வந்தார்? என்ன பிரச்சினை? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோவிலுக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget