மேலும் அறிய

"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!

கணவனால் உயிருக்கு ஆபத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த மனைவியால் பரபரப்பு

திருப்பத்தூரில் கணவனால் உயிருக்கு ஆபத்து என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்  அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வி (50) என்பவர் தனது கணவர் ஸ்ரீதர் (60) தன்னையும் தனது மகனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, எனது கணவர் ஸ்ரீதர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு குடும்பத்தை மிரட்டி கொலை செய்து விடுவேன் எனக் கூறியதன் பேரில், கந்திலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 58 நாட்கள் வேலூர் மத்திய  சிறையில் இருந்தார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்தபோது அவரது தம்பி வரதராஜன், உன்னை நான்தான் வெளியே எடுத்தேன் உன் மகன் உன்னை சிறையில் வைத்திருக்க பல முயற்சிகள் செய்தான் என்று தவறான தகவலைக் கூறி, என் மகன் மீது என் கணவருக்கு வெறுப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, என் கணவர் என் மகனைப் பற்றி தவறாக எண்ணி, தினமும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் அவரிடம் போடா என்று கூறியதற்காக என்னை சரமாரியாக தாக்கி உதைத்தார்.பின்பு எனது மகன் சரவணன் என்னை அழைத்து  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தார்

தற்போது என்னையும் எனது மகன் சரவணன் (20) என்பவரையும் கொலை செய்து விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார்.இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முழு காரணமும் எனது கணவர் ஸ்ரீதரே ஆவார். எனவே, எங்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
நூடுல்ஸ் சாப்பிட்டதால் 5 பேர் உயிரிழப்பு.. திட்டமிட்ட தற்கொலையா? .. உ.பி.யை அதிர வைத்த சம்பவம்!
நூடுல்ஸ் சாப்பிட்டதால் 5 பேர் உயிரிழப்பு.. திட்டமிட்ட தற்கொலையா? .. உ.பி.யை அதிர வைத்த சம்பவம்!
தஞ்சையில் போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி அட்டகாசம்! பொதுமக்களை அச்சுறுத்திய டிரைவர் கைது
தஞ்சையில் போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி அட்டகாசம்! பொதுமக்களை அச்சுறுத்திய டிரைவர் கைது
மயிலாடுதுறையில் கொடூரம்; தந்தை கொலை... மூன்று மகள்கள் தாயுடன் கைது... அதிர்ச்சி பின்னணி..
மயிலாடுதுறையில் கொடூரம்; தந்தை கொலை... மூன்று மகள்கள் தாயுடன் கைது... அதிர்ச்சி பின்னணி..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget