பூசாரி பூஜை செய்த பலே திருடன்! நகை, பணம் அபேஸ்! போலீசார் தேடுதல் வேட்டை!
திருப்பத்தூர் அருகே பூசாரி வீட்டில் மூன்று சவரன் தங்க நகை மற்றும் 3.5 லட்சம் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே பூசாரி வீட்டில் மூன்று சவரன் தங்க நகை மற்றும் 3.5 லட்சம் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (63). பேய் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்று உள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது மகன் வடிவேலின் மனைவி ராணி மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் மாமனார் கண்ணன் வீட்டின் அருகே தனியாக குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு 12 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்ததாகவும் மிளகாய் பொடி தூவி வீட்டை மூடிவிட்டு வெளியே தாழ் போட்டு பக்கத்து வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 தங்க நகை மற்றும் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக ராணி புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனரா? அல்லது அக்கம் பக்கத்தினர் எவரேனும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டினரா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















