மேலும் அறிய
Advertisement
Crime: மாயமான தலை.. கண்மாயில் வீசப்பட்ட உடல்..! மானாமதுரையில் இளைஞர் வெட்டிப் படுகொலை..!
ராமுவின் தலை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காததால் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில் வேல் மகன் ராம். 27 வயதான ராம் நேற்று இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது செல்போன் மூலம் ராமுவை யாரோ அழைத்ததாக கூறப்படுகிறது.
#crime | சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராம் என்ற இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனார். தலையை தனியாக வெட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— arunchinna (@arunreporter92) December 1, 2022
| @sivagangai | #abpnadu |. pic.twitter.com/XXkUL91dgU
இந்நிலையில் ராமு செங்கோட்டை கிராமத்தின் அருகே உள்ள இம்மனேந்தல் கண்மாய் பகுதிக்கு தனியாக சென்றுள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் ராமுவை கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். ராமுவை கொலை செய்த பிறகு உடலை கண்மாய் பகுதியில் வீசிவிட்டு தலையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இரவில் இருந்து அப்பகுதியில் தலையை தேடி வருகின்றனர். ராமுவின் தலை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காததால் காவல்துறையினர் இந்த விசாரணையை மேலும் துரிதப்படுத்தியுள்ளனர். இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டு, உடலை மட்டும் வீசிச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க - மதுரை: இலவச அனுமதி.. மன்னர் திருமலை நாயக்கர் மஹாலுக்கு படையெடுத்த பொதுமக்கள்..
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pugar Petti: மதுரை யானைமலை அடிவாரத்தில் மலையாய் குவியும் குப்பைகள்; உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கைகள் எடுக்குமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion