மேலும் அறிய

Crime: தேனி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை - கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்

வருசநாடு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு. கைதான வாலிபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி சமுத்திரம் வயது 48. இவர்களுக்கு பூங்கோதை என்ற மகள் உள்ளார். அவர் திருமணமாகி அதே கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். பெருமாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சமுத்திரம் தனியாக வசித்து வந்தாா். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சமுத்திரம் வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சமுத்திரம் அவரது வீட்டு வாசலில் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் சமுத்திரம் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் சமுத்திரத்தின் மகள் பூங்கோதைக்கு தகவல் கொடுத்தார்.

Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் காயமின்றி தப்பிய பயணிகளுக்கு சிறப்பு ரயில் - ரயில்வே அறிவிப்பு

Crime: தேனி  அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை - கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பூங்கோதை மற்றும் அவரது உறவினர்கள் பதறி அடித்து கொண்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது சமுத்திரம் இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே தகவல் அறிந்த வருசநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சமுத்திரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் கொலையாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சமுத்திரத்தின் வீட்டிற்கு பின்னால் உள்ள மலைப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் அங்கு அரிவாள் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சொக்கர் (35) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

Coromandel Express Accident: ஒடிசாவில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 ரயில்கள்: கோர விபத்து நிகழ்ந்தது எப்படி தெரியுமா?

Crime: தேனி  அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை - கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின்போது அவர் சமுத்திரத்தை வெட்டி கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில், ‘எனக்கு 35 வயதாகிறது. எனக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். பெண் வீட்டார்களிடம் தன்னை பற்றி சமுத்திரம் தவறாக பேசியதால் தொடர்ந்து திருமணம் தடைபட்டு வந்தது. மேலும் சமுத்திரத்தின் வீட்டு வழியாக செல்லும் போது அவர் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் முன்பு சமுத்திரம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நான் அரிவாளை எடுத்து கொண்டு அங்கு சென்றேன்.

Odisha Train Accident: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!

இதையடுத்து தூங்கி கொண்டிருந்த சமுத்திரத்தின் முகம், கழுத்து பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தேன். பின்னர் நான் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்’. இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை வாலிபர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான சொக்கர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 12 வருடம் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget