மேலும் அறிய

Odisha Train Accident: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் சிறப்பு உதவி மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் நிலைமையை கேட்டறிந்தார்.

இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயங்கர விபத்துக்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் இறந்து இருப்பதாக செய்தி வந்திருக்கிறது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் இரவே ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசினேன். அங்கு மீட்பு பணிகள் ஏதேனும் தேவைப்பட்டால் தமிழகத்தில் தயாரக இருப்பதாக தெரிவித்தேன். தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், வருவாய் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் என பலர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

விபத்து குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்தேன். விபத்தில் சிக்கி தமிழகம் வந்து சேரக்கூடியவர்களை அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ வசதிகளும் செய்ய தயார் செய்யப்பட்டு வருகிறது. காணொளி வாயிலாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளருடன் தற்போது கேட்டறிந்தோம்‌‌. ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலியை செலுத்தினோம். இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியின் நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். ரயில் விபத்து காரணமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரமாவது இன்னும் மீட்பு பணிகள் நடைபெறும் என்றார்.” என பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget