போடி அருகே காட்டுமாடு வேட்டையாடிய 3 பேர் கைது - வனத்துறை அதிரடி
போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான ஊத்தம்பாறை வனசரகம் அருகே பூஞ்சோலை வனப்பகுதியில் காட்டுமாடு வேட்டையில் ஈடுபட்ட மூன்று நபர்களை வனத்துறையினர் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான ஊத்தம்பாறை வனசரகம் அருகே பூஞ்சோலை வனப்பகுதியில் காட்டுமாடு வேட்டையில் ஈடுபட்ட மூன்று நபர்களை வனத்துறையினர் கத்தி ,வேல் கம்பு, அறிவால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.
Cyclone Michaung: சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான், விஷ்ணு விஷால் - படகில் மீட்ட தீயணைப்புத்துறை
போடி வனப் பகுதியில் இருந்து காட்டு மாடுகளை வேட்டையாடி இரண்டு மூடைகளை கட்டிக்கொண்டு ஆட்டோவில் கடத்தி வருவதாகவனச்சரக அலுவலர் நாகராஜ்க்கு தகவல் கிடைத்தன. தகவல் பேரில் - போடி வனச்சரகர் நாகராஜ் தலைமையில் வனவர் கனிவர்மன், வனக்காப்பாளர்கள் இசக்கியம்மாள், கார்த்திக் செல்வராஜ் உள்ளிட்டோர் போடி கூத்தம்பரை வனப்பகுதியில் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது வனப்பகுதி வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வருவதைக் கண்டு நிறுத்திசோதனை மேற்கொண்டதில்,
போடி மேலத் தெரு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 30, புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் 29, அஜித் 29 ஆகிய மூவரும் வனப்பகுதியில் காட்டுமாட்டை வேட்டையாடி இரண்டு சாக்கு பைகளில் கறியுடன் ஆட்டோவில் ஏற்றி வந்தது தெரிய வந்தது . இதை அடுத்து மூவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து வேட்டையாட பயன்படுத்திய கத்தி அரிவாள், வேல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பறிமுதல் செய்து வனவிலங்கு வேட்டை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போடி வனப்பகுதியில் இரவு நேரங்களில் வனவிலங்கு வேட்டையாடுவதும் குறிப்பாக காட்டுமாடு பன்றிகளை வேட்டையாடி மான்கறி என கூறி விற்பனை செய்வது தெரிய வந்தது.