தேனி : பணியிட மாற்றம் செய்ததால் ஆத்திரம்.. ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட பெண் அலுவலர்..
தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட சமூக நலத்துறை அலுவலக அதிகாரியை சரமாரியாக வெட்டிய ஊழியர்.அரசு அலுவலகத்தில் பட்டப்பகலில் கொலை வெறி தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சித்தலைவர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன. இதில் மாவட்ட திட்ட அலுவலகத்தின் பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அலுவலகத்தில், திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி இன்று பணியில் இருந்தார். அப்போது, இதே அலுவலகத்தில் கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய போடியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர் அலுவலகத்துக்குள் புகுந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ ராஜேஸ்வரியை சரமாரியாக தலை மற்றும் கையில் வெட்டினார்.
கோலாகலமாக நடந்த கொடைக்கானல் மலர் கண்காட்சி.. எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?
இதனால் ராஜராஜேஸ்வரி உயிர் பிழைக்க அரிவாள் வெட்டுடன் அருகில் இருந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் முத்துமணியின் அறைக்கு ஓடியுள்ளார். இதைப்பார்த்த முத்துமணி அலற தொடங்கினார். முத்து மணியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வளாகத்தில் இருந்த அனைவரும் ஓடி வந்து ராஜராஜேஸ்வரியை வெட்டிய உமாசங்கரை பிடித்து, அவரிடமிருந்து அரிவாளைப் பறித்தனர். அதன் பின்பே ராஜ ராஜேஸ்வரி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
#தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி சமூக நலத்துறை அதிகாரியை உதவியாளர் அரிவாள் வெட்டியதால் பரபரப்பு pic.twitter.com/JK8VQ1QnRu
— Nagaraj (@CenalTamil) May 30, 2022
Watch Video: ரசிகரின் வீட்டுக்கு விசிட் அடித்த அஜித்! வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!!
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த அரசு வாகனத்தில் ராஜராஜேஸ்வரியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உமா சங்கரை கைது செய்த காவல்துறையினர் தேனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் உமாசங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ராஜராஜேஸ்வரி, அவரை பலமுறை பணியிட மாற்றம் மற்றும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்