மேலும் அறிய

Crime: மதுபோதையில் மனைவி என நினைத்து மகனை கொன்ற தந்தை - குடிக்க பணம் தராதால் தந்தை வெறிச்செயல்

நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவி என்று நினைத்துக் கொண்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த மகன் அர்ஜுன் தலையில் குழுவிக் கல்லை தூக்கி போட்டார்.

பண்ருட்டி அருகே மதுபோதையில் மனைவி என நினைத்து மகனின் மீது குழவி கல்லை போட்டு கொன்ற தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளி ஆவார். திருமணமான இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.  மகன் அர்ஜுன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுஅடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த‌து. இந்தநிலையில், நேற்று இரவு முருகன் மதுகுடிக்க பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்தார். இதனால் மனைவியுடன் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முருகன் வீட்டைவிட்டு வெளி சென்றார். பிறகு நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவி என்று நினைத்துக் கொண்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த மகன் அர்ஜுன் தலையில் குழவிக் கல்லை தூக்கி போட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த அர்ஜுன் அதே இடத்தில் பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
 
 

Crime: மதுபோதையில் மனைவி என நினைத்து மகனை கொன்ற தந்தை - குடிக்க பணம் தராதால் தந்தை வெறிச்செயல்
 
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர். மதுபோதையில் தந்தையே மகனை கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget