மேலும் அறிய

வீட்டின் மாடியில் இருந்த 450 கிலோ வெடி பொருட்கள்... தஞ்சை அருகே பரபரப்பு

வீட்டின் மாடி பகுதியில் 450 கிலோ எடையில், நாட்டு வெடிகள், வெடி பொருட்கள் ஆகியவை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட 450 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட 450 கிலோ நாட்டு வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை வருவாய்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக மதுக்கூர் காவல் நிலைய போலீஸார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து  பட்டுக்கோட்டை வட்டத்தில் இது தொடர்பாக வேறு இடங்களில் ஏதும்  வெடிபொருட்கள் முறையாக உரிமம் பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. 

இந்த ஆய்வின் போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, துணை வட்டாட்சியர் ஷேக் உமர்ஷா, மதுக்கூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், மதுக்கூர் சரக வருவாய் ஆய்வாளர் கவுதமன், கீழக்குறிச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கீழக்குறிச்சி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் வீரசோழன், கிராம உதவியாளர்கள் பத்மா, ரவிச்சந்திரன் ஆகியோர் கீழக்குறிச்சி பகுதியில் ப.அம்பிகாபதி (45) என்பவரது வீட்டில் ஆய்வு செய்தனர்.அப்போது, அவர் வீட்டின் மாடி பகுதியில் 450 கிலோ எடையில், நாட்டு வெடிகள், வெடி பொருட்கள் ஆகியவை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வருவாய் துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அம்பிகாபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கோயில் விழாக்கள், காதணி விழா, திருமணம் என ஏராளமாக நடந்து வருகிறது. இதில் நாட்டு வெடிகள் வெடிக்கப்படுகின்றன. இதற்காக உரிமம் வாங்காமல் விதிகளை மீறி வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல்தான் அனுமதியின்றி திருவோணம் பகுதியில் வெடிகள் தயாரிப்பு பணியின் போது கிடங்கு வெடித்து சிதறி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இதுபோன்று ஏதாவது தகவல் கிடைத்தால் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது பொதுமக்களின் கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Embed widget