மேலும் அறிய

இனி டாட்டா பை..பை..தான்...வருது... வருது போக்குவரத்து நெரிசலை தீர்க்க சூப்பரான ஒன்னு வருது!!

எப்பொழுதும் மக்கள் நடமாட்டமும், அதிகளவில் போக்குவரத்து நெரிசலும் இருக்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

திருச்சி: நொந்து கொள்ள வைக்கும் நெரிசலுக்கு இனி டாட்டா பை..பை..தான். எங்கு. எதனால் தெரியுங்களா? திருச்சிக்கு வரும் புதிய மேம்பாலங்களால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னைக்கு நிகராக திருச்சி இப்போது செமையாக புதுப்பொலிவு பெற்று வருகிறது.

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஓடத்துறை முதல் மல்லாட்சிபுரம் வரை 2.4 கி.மீ உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிலப்பரப்பு ஆய்வு மற்றும் போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் கரூர் புறவழிச்சாலை மற்றும் அரசு மருத்துவமனை, மாநகராட்சி மைய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரும் பாரதிதாசன் சாலை, ஈவேரா சாலை, புத்தூர் பிரதான சாலைகள் எப்பொழுதும் மக்கள் நடமாட்டமும், அதிகளவில் போக்குவரத்து நெரிசலும் இருக்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். சிலநேரங்களில் ஏன் வெளியில் வாகனத்தில் இந்த பகுதிக்கு வந்தோம் என்று நொந்து கொள்ள வைக்கும் அளவிற்கு வாகன நெரிசல் இருக்கும்.


இனி டாட்டா பை..பை..தான்...வருது... வருது போக்குவரத்து நெரிசலை தீர்க்க சூப்பரான ஒன்னு வருது!!

இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏதுவாக திருச்சி மாநகரில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருந்தார்.

அதன்படி அரசு மருத்துவமனை எம் ஜி ஆர் ரவுண்டானா மத்திய பேருந்து நிலையம் செல்லும் வழி வயலூர் சாலை பகுதிகள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஏற்கனவே தலைமை தபால் நிலையம் புத்தூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்த தகவல் வெளியாகி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக காவிரி பாலம் தொடங்கும் பகுதி சத்திரம் பேருந்து நிலையம் அதனை சுற்றியுள்ள அண்ணா சிலை ரவுண்டானா, கரூர் புறவழிச்சாலை கலைஞர் அறிவாலயம் சிக்னல் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஓடத்துறை மல்லாட்சிபுரம் இடையே உயர் மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கும் திட்டமானது தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,  திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஓடத்துறை காவிரி பாலம் முதல் அண்ணா சிலை கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாச்சிபுரம் பறவைகள் பூங்கா அருகே வரை சுமார் 2.4 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பாலம் முதலில் 17.2 மீட்டர் அகலத்தில் தொடங்கி சில பகுதிகளில் 13 மீட்டர் ஆகி குடமுருட்டி பாலத்துக்கு அருகே மல்லாட்சிபுரத்தில் நிறைவடையும் பகுதியில் 10 மீட்டராக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட அமைக்கப்படும் இடையே சத்திரம் பேருந்து நிலையத்திற்கு எட்டு மீட்டர் அகலத்தில் ஒரு இணைப்பு பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.

இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு சுமார் 1.37 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிலப்பரப்பு ஆய்வு மற்றும் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணியானது தற்போது அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இது தொடர்பான அறிக்கை அரசு நிர்வாக ஒப்புதலுக்காக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

மல்லாட்சிபுரம் உயர்மட்ட பாலத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணிகளுக்காக 97.65 கோடியும் பயன்பாட்டு மாற்றத்திற்கு 31 கோடியும், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு 338.95 கோடிகளும் பணிகளை மேற்கொள்ள அரசு நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிர்வாக ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு உயர் மட்ட மேம்பாலங்களும் அமைக்கப்பட்டால் திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என மக்கள் வெகு மகிழ்ச்சியில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget