மேலும் அறிய

Tasmac Close : காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை மூடியதற்கு பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

kanchipuram tasmac : " காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 அரசு டாஸ்மார்க் கடைகளை மூடப்படும் என அறிவிப்பானது வெளியிடப்பட்டது "

500 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாடு அரசு அறிவித்தபடி  500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதலமைச்சராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்த கோரிக்கை சமீபத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து வலுவாக எழத் தொடங்கியுள்ளது.

இப்படியான நிலையில், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஏப்ரல் 12 ஆம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அப்போதைய அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும்  மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில்  தகுதியாக 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்’ என தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த கடைகள் கண்டறியும் பணி நடைபெற்று வந்தது. பின்னர் ஏப்ரல் 20 ஆம் தேதி மதுக்கடைகள் மூடுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் இந்த அறிவிப்பு  கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டமான ஜூன் 3 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை. இதனிடையே நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மாநிலம் முழுவதும் செயல்படும் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் செயல்படாது’ என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

மண்டல வாரியாக விவரம் 

சென்னை மண்டலத்தை பொறுத்தவரை சென்னையில் 61 கடைகளும், காஞ்சிபுரத்தில் 31 கடைகளும், திருவள்ளூரில் 46 கடைகளும் மூடப்படுகிறது. இதேபோல் கோவை மண்டத்தில் கோவையில் 20 கடைகளும், திருப்பூரில் 24, ஈரோட்டில் 24, நீலகிரியில் 3, கரூரில் 7 கடைகளும் மூடப்படும்.  மேலும் மதுரை மண்டலத்தில் மதுரையில் 21, திண்டுக்கலில் 15, சிவகங்கையில் 14, ராமநாதபுரத்தில் 8, விருதுநகரில் 17, திருநெல்வேலியில் 13, தூத்துக்குடியில் 16, கன்னியாகுமரியில் 12, தேனியில் 9 டாஸ்மாக் கடைகளும் இன்று முதல் செயல்படாது. அதேபோல் சேலம் மண்டலத்தை பொறுத்தவரை சேலத்தில் 17, தருமபுரியில் 4, கிருஷ்ணகிரியில் 2, நாமக்கலில் 18, வேலூரில் 8, திருவண்ணாமலை 8, அரக்கோணம் 2  கடைகளும் மூடப்படுகிறது.  திருச்சி மண்டலத்தின் நிலவரப்படி திருச்சியில் 16, நாகப்பட்டினம் 7, தஞ்சாவூரில் 15, புதுக்கோட்டையில் 12, திருவாரூரில் 10, கடலூரில் 11, விழுப்புரத்தில் 21, பெரம்பலூரில் 8 கடைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம்

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 அரசு டாஸ்மார்க் கடைகளை மூடப்படும் என அறிவிப்பானது வெளியிடப்பட்டது . காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையை மூடியதால் , பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே கோவில் அருகே இருக்கும் இந்த மதுக்கடி மூட வேண்டும் என பாஜகவினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget