Sulli Deals App | இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் Sulli App-ஐ உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் கைது..!
இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் அவர்களது புகைப்படங்களைத் திருடி அவர்களது சுயமரியாதையைக் காயப்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த சல்லி ஆப் கேசில் முதல் கைது நடந்திருக்கிறது.
டெல்லி போலீஸ் சல்லி ஆப் கேசில் சம்பந்தப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரைக் கைது செய்திருக்கிறது. சல்லி ஆப் கேசில் செய்யப்பட்டிருக்கும் முதல் கைது இது.
சல்லி ஆப் கடந்த வருடம் வெளியிடப்பட்டது, சமூக வலைதளங்களில் இருக்கும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களைத் திருடப்பட்டு, ‘இவை ஏலம் விடப்படுகின்றன’ என்ற பெயரில் இந்த ஆப்பில் வெளியிடப்பட்டன. வேண்டுமென்றே இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்ட இந்த ஆப் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதும் இந்த ஆப் முடக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட அம்கரேஷ்வர் தாக்கூர் இந்தூரில் வைத்து டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் தான் சல்லி ஆப்பின் பின் இருந்த மாஸ்டர் மைன்ட் என்று டெல்லி ஸ்பெஷல் செல்லின் ஆணையர் KPS மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
26 வயதான தாக்கூர் இந்தூரின் ஐபிஎஸ் அகாடமியிலிருந்து பிசிஏ பட்டம் பெற்றவர். இவர் கிட்ஹப் மூலமாக சல்லி ஆப்பிற்கான கோட்-ஐ உருவாக்கியிருப்பதாகவும் அதன் பின்பு அந்த ஆப்பை ட்விட்டரில் பகிர்ந்திருப்பதாகவும் போலீஸ் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 2020, தாக்கூர் ‘ட்ரேட் மஹாசபா’ என்னும் க்ரூபில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த க்ரூப் மத ரீதியான வன்மத்தின் அடிப்படையில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் கேலி சித்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. சல்லி ஆப் என்ற இந்த ஆப் உருவாக்கப்பட்டதும் இந்த க்ரூப்பில் இருந்தவர்களும் சமூகத்தில் உயர்பதவிகளில், பணிகளில் இருக்கும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களைத் திருடி இந்த ஆப்பில் வெளியிட்டுள்ளனர்.
ஆப் குறித்த செய்தி வெளியாக ஆரம்பித்ததும் தாக்கூர் தனது சமூக வலைதள பக்கங்களை அழித்துள்ளார். போலீஸ் அவரிடம் இருந்த மின்னணு சாதனங்களைக் கைப்பற்றி விசாரித்து வருகிறது. தாக்கூர் குறித்த துப்பு ‘புல்லி பாய்’ என்ற ஆப்பை உருவாக்கிய நிரஜ் பிஷ்னைய் மூலம் கிடைத்துள்ளது. புல்லி பாய் கேசில் இவருடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்