Villupuram: ஆங்கிலம் பாடத்தில் தோல்வி; மாணவி தற்கொலை - திண்டிவனம் அருகே சோகம்
திண்டிவனம் அருகே தனித்தேர்வராக 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஆங்கிலம் பாடத்தில் தோல்லி அடைந்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ரமணி. 2021ஆண்டு ஓமந்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் வீட்டில் இருந்தபடியே படித்து தனித்தேர்வராக பிளஸ் 2 எழுதினார். இந்நிலையில் நேற்று காலை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி ஆங்கிலம் பாடத்தில் மாணவி தோல்வி அடைந்ததால் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். பிளஸ் 2 மாணவி ரமணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்