மேலும் அறிய
Advertisement
தாயைக் கொன்ற கொடூரம் : 15 வயது மகன் போலீசில் சரண்
சிதம்பரம் அருகே பெற்ற தாயையே 15 வயது மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட தொடந்தாலமன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கவரிங் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சங்கீதா மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 15 வயதில் திருமூர்த்தி என்ற ஒரு மகன் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சங்கீதா வீட்டில் வேறு ஒரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை பார்த்த 15 வயது மகன் தாயிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபத்தில் சங்கீதா வீட்டை விட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியேறி மூன்று தினங்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை பார்த்த 15 வயது சிறுவன் தாயென்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியால் கொடூரமாக வயிற்றில் குத்தினார். இதில் குடல் சரிந்து கீழே விழுந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனையடுத்து தாயை கொலை செய்த சிறுவன், அருகிலுள்ள சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் தாயை கொன்றதாக சரண் அடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொலை நடந்த இடத்தில் சங்கீதாவின் கணவர் பாலமுருகனும் இருந்ததாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த கொலையில் பாலமுருகனுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பெற்ற தாயை கொடூரமான முறையில் கொலை செய்த சிறுவனால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion