மேலும் அறிய

டிபன் பாக்சில் 1.2 கிலோ தங்கப் பசை; சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ஒப்பந்த ஊழியர்

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 62 லட்சம் மதிப்புடைய, தங்கப் பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள்.

சென்னை விமான நிலையத்தில், பணி முடிந்து வெளியில் வந்த ஒப்பந்த ஊழியர் டிபன் பாக்சில், ரூ.62 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்கப் பசை இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கப் பசையை, ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்துவிட்டு, கடத்தல் ஆசாமி இலங்கைக்கு தப்பி ஓட்டம்.
 
புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான நிலையம்
 
சென்னை ( Chennai News ) : சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான நிலையத்தில், ஹவுஸ் கீப்பிங் பிரிவில் தனியார் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ஊழியர்கள், பணி முடிந்து நேற்று  வெளியில் சென்று கொண்டிருந்தனர். கேட்டில் நின்ற பாதுகாப்பு வீரர்கள், அந்த ஊழியர்களை வழக்கம் போல்  பரிசோதித்தனர். அப்போது ஒப்பந்த ஊழியர் ஒருவருடைய டிபன் பாக்ஸ்க்குள், தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.
 
" சர்வதேச மதிப்பு 62 லட்சம் "
 
இதை அடுத்து அந்த ஒப்பந்த ஊழியரை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, ஒப்பந்த ஊழியர் டிபன் பாக்ஸில் இருந்த தங்கப் பசையை ஆய்வு செய்தபோது, அதில் 1.2 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 62 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அந்த ஒப்பந்த ஊழியரை, தங்களுடைய அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
 
" மற்றொரு கடத்தல் ஆசாமி "
 
அப்போது அதிகாலையில் துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி, துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை செல்வதற்கு ட்ரான்சிட் பயணியாக வந்தார். அவர்  இந்த தங்கப் பசையை கடத்தி வந்துள்ளார். கடத்தி வந்த தங்கப் பசை பார்சலை, இந்த ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து, விமான நிலையத்தை விட்டு வெளியில் எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அவ்வாறு வெளியில் கொண்டு வந்த பின்பு, அங்கு மற்றொரு கடத்தல் ஆசாமி, ஒப்பந்த ஊழியரிடம் உள்ள தங்கப்பசை பார்சலை வாங்கிக்கொண்டு, அவருக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க இருந்ததாகவும் தெரியவந்தது.
 
" சென்னையில் இருந்து இலங்கை "
 
இதை அடுத்து சுங்க அதிகாரிகள், விமான நிலைய ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.62 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்கப்பசையையும் பறிமுதல் செய்தனர். இதற்கு இடையே துபாயிலிருந்து தங்க பசையை கடத்தி வந்த இலங்கை சேர்ந்த கடத்தல் ஆசாமி, ட்ரான்சிட் பயணி என்பதால், அவர் விமான நிலையத்தை விட்டு வெளியில் வராமலேயே, சென்னையில் இருந்து இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் தப்பி சென்று விட்டார். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற இலங்கை கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget