மேலும் அறிய

ராமநாதபுரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது

’’காதலனுடன் பேசும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மகள் உறவுமுறை என்றும் பாராமல் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்’’

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு ராஜா (25). இவரும் 25 வயது பட்டதாரி பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். கருப்பு ராஜா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.  இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார்.  பின்னர் அந்த பெண்ணிடம் பேசுவதையும், பழகுவதையும் கருப்பு ராஜா நிறுத்தினார்.

இவர்களின் காதல் அந்தப் பெண்ணின் சித்தப்பா உறவுமுறை கொண்ட முனியசாமி (45) என்பவருக்கு தெரிந்துள்ளது.  உடனே முனியசாமி அந்த பெண்ணிடம் கருப்பு ராஜாவை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி ஊரின் ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதிக்கு வரச்சொல்லி உள்ளார். அதன்படி அந்த பெண்ணும், கருப்பு ராஜாவும் நள்ளிரவு 12 மணிக்கு அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.  ஏற்கனவே அங்கு வந்து முனியசாமி ஒளிந்து நின்றிருந்தார். அந்த பெண்ணும் கருப்பு ராஜாவும் மீண்டும் பேசி நெருக்கமாக இருந்துள்ளனர். அதையும் முனியசாமி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த முனியசாமி அவர்களிடம் அந்த வீடியோவை காட்டினார். அதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது

உடனே முனியசாமி கருப்பு ராஜாவை அங்கிருந்து, அனுப்பிவிட்டு அந்த பெண்ணை மட்டும் இருக்க வைத்தார். அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மகள் உறவுமுறை என்றும் பாராமல் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை முனியசாமி மதுரைக்கு அழைத்து வந்து, திருட்டுத்தனமாக தாலி கட்டி, அதையும் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.  பின்னர் அந்த பெண்ணை முனியசாமி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிகிறது. அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய காட்சியை முனியசாமி அவரது செல்போனிலேயே வைத்துள்ளார். இந்தநிலையில் முனியசாமியின் மனைவி தற்செயலாக செல்போனை பார்த்துள்ளார். அதில் அந்தப் பெண்ணும் முனியசாமியும் திருமணம் செய்தபடி இருந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து முனியசாமியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது

பின்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரிடமும் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனையடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், இதுகுறித்து பரமக்குடியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். பின்னர் முனியசாமியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் காதலன் கருப்பு ராஜாவை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டியதாக முனிசாமியின் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget