மேலும் அறிய

Crime: ஷூவில் ரகசிய கேமரா! 3200 வீடியோக்கள்! குட்டைப்பாவாடை பெண்களை குறி வைத்த டாக்டர்!

-கல்லூரிகள், மால்கள் போன்ற இடங்களில்தான் ஜூ பென் அதிக வீடியோக்களை ரெக்கார்ட் செய்துள்ளார்.

ஷூவில் ரகசிய கேமராவை பொருத்தி குட்டைப்பாவாடை அணிந்த பெண்களின் அந்தரங்க பகுதியை வீடியோ எடுத்த டாக்டர் வசமாக சிக்கியுள்ளார். இவர் இதுவரை 3200க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்துள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் ஜூ பென் வி. ஒருவர் தன்னுடைய ஷூவில் ரகசிய கேமராவைப் பொருத்தி மருத்துவமனை, மால்கள், பொது இடம், ஜூனியர் கல்லூரிகள் என பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் சுற்றி வந்துள்ளார். அவரது ஷூவில் கேமரா இருப்பதால் குட்டைப்பாவாடை அணிந்த பெண்களின் அந்தரங்கப்பகுதியை அவர் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். அவர் இதுவரை 3200க்கும் அதிகமான வீடியோக்களை எடுத்த குற்றச்சாட்டில் கடந்த 2020ம் ஆண்டே அந்த டாக்டர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அப்போது அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது பெயர் மருத்து பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலுக்கான (SMC) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Crime: ஷூவில் ரகசிய கேமரா! 3200 வீடியோக்கள்! குட்டைப்பாவாடை பெண்களை குறி வைத்த டாக்டர்!

இது குறித்து தெரிவித்துள்ள SMC, ''பல சந்தர்ப்பங்களில் இதுமாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவரை தொடர்ந்து தொழில் ரீதியில் அனுமதிப்பது மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உண்டாக்கும். அதனால் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளது.

கல்லூரிகள், மால்கள் போன்ற இடங்களில்தான் ஜூ பென் அதிக வீடியோக்களை ரெக்கார்ட் செய்துள்ளார். கிட்டத்தட்ட 630க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்த வீடியோக்களை மருத்துவர் எடுத்துள்ளார். பள்ளி விழாவில் மாணவர்போல சீருடை அணிந்துகொண்டு 97 வீடியோக்களை ஜூ எடுத்துள்ளார். இவரை பார்த்த மாணவர்கள் சிலர் ஆசிரியரிடம் புகாரளிக்கவே போலீசில் சிக்கியுள்ளார் ஜூ.

இந்த குற்றச்சம்பவம் தெரியவந்தபோது ஜனவரி 2018ம் ஆண்டு முதன்முறையாக ஜூ பென் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்தபோதும் ஜூவின் வீடியோ எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து பெண்களின் குட்டைப்பாவாடை வீடியோவை எடுத்து வந்துள்ளார். அடுத்தடுத்து அவர் சிக்கவே மொத்தம் 3 முறை ஜூ கைது செய்யப்பட்டுள்ளார். ஜூவிடம் இருந்து ரகசிய கேமரா, கேமரா பொருத்துவதற்கான சிறப்பு ஷூக்கள், மெமரி காடுகள், ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை போலீசார் கைது செய்தனர்.

மொபைல் சார்ஜரில் கேமரா..

கர்நாடகாவில் மொபைல் சார்ஜரில் கேமரா வைத்து இளம்பெண்ணின் நிர்வாணத்தை வீடியோ எடுத்த சம்பவம் சமீபத்தில் நடந்தது. கர்நாடகாவில்  இளம் பெண் ஒருவர் சைபர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் , “முதலில் எனக்கு ஒரு ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து ஆபாச வீடியோ ஒன்று வந்தது. அதை முதலில் நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதன்பின்னர் அவர் ஒரு வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் நான் வீட்டில் இருப்பது போல் காட்சிகள் இடம்பெற்று இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

அந்தப் பெண் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அந்த ஃபேஸ்புக் பக்கம் பயன்படுத்திய இணையதள முகவரியை வைத்து தேடியுள்ளனர். அப்போது மைசூரு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(30) என்ற நபர் குறித்து காவல்துறைக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சென்று அவரை பிடித்தனர். அதன்பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது மைசூருவிலிருந்து மகேஷ் பெங்களூருவிற்கு ஒரு பணிக்காக வந்துள்ளார். அந்த சமயத்தில் இவர் அந்த இளம் பெண் வீட்டில் தங்கியுள்ளதாக தெரிகிறது. அப்போது அவர் மொபைல் சார்ஜர் ஒன்றுடன் வேவு பார்க்கும் கேமராவை அவர் வாங்கி வைத்தது தெரியவந்தது. அதன் மூலமே இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை பதிவு செய்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget