பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
"ஒரு மாதத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக ஆதவ் தெரிவித்துள்ளார்"

விஜய் தேர்தலில் வெற்றி பெற்றால் சர்கார் படத்தில் உள்ளதைபோல் விட பெருசாக செய்வார் என மாணவர்கள் கேள்விக்கு ஆதவ் பதில் அளித்தார். முதலமைச்சர் அலுவகத்தில் இருந்து போன் செய்தால்கூட கையெழுத்திட மாட்டேன் ஆகையால் தான் கடந்த 7 ஆண்டுகளில் கூடைப்பந்து போட்டியில் தமிழக மாணவர்கள் முதலிடம் என தவெக தேர்தல் பிரசார பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுன் தனியார் கல்லூரியில் விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
விஜய் விருதுகள் வழங்கும் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே குன்னம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு விஜய் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 135 மாணவ மாணவிகளுக்கு விஜய் விருதுகளை வழங்கினர். விஜய் விருதுடன் UPSC மேற்படிப்புக்கு 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது என மொத்தம் ரூ.2 கோடி வரையிலான உதவிதொகைகளை வழங்கினார்,
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆதவ் அர்ஜுன், ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தவெக தலைவர் விஜய் வருவார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சர்க்கார் பட பாணியில் விஜய் இருப்பாரா என மாணவன் கேட்ட கேள்விக்கு ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு மாற்றத்திற்க்காக தினந்தோறும் பலரிடம் திட்டுகளை வாங்கிட்டு அரசியலில் வந்துள்ளார். சர்கார் பட பாணியை என்ன அதைவிட பெருசாக விஜய் வருவார் என ஆதவ் அர்ஜுன் பதில் அளித்தார்.
நேர்மையாக இருக்க வேண்டும்
அம்பேத்கர் சொல்வது போல் எதைநோக்கி நாம் செல்கிறோமோ அதிகாரத்தை நோக்கி அடையும் பொழுது பேனா கிடைக்கும், அப்போது அந்த பேனாவில் நீங்கள் கையெழுத்து போடும் போது உண்மையாவாகவும் நேர்மையாகவும் செய்யவேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளாக கூடைப்பந்து போட்டியில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தால் கூட கையெழுத்திட்டது கிடையாது, ஆகையால் தான் தமிழ்நாடு இன்று நம்பர் ஒன்றில் இருக்கிறது, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று வருகிறது என தவெக தேர்தல் மேலாண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுன் மாணவர்களிடையே பேசினார்.
இந்நிகழ்வில் தனியார் தகவல் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் மரிய வில்சன் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.





















