கணவரின் விந்தணு கலந்த கப்கேக்: குழந்தைகளுக்கு ஊட்டிய பள்ளி ஆசிரியர் - அமெரிக்காவில் அதிர்ச்சி
கணவரின் விந்தணுக்களை கப்கேக்குகளில் லேசிங் செய்து ஊட்டியதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வகுப்புப் பிள்ளைகளுக்குக் கொடுத்த கப் கேக்குகளில் தனது கணவரின் விந்தணுக்களைக் கலந்து ஊட்டியதால் நீதிமன்றத்தால் தற்போது தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். கணவரின் விந்தணுக்களை கப்கேக்குகளில் லேசிங் செய்து ஊட்டியதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைகளுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் பாலியல் குற்றங்களுக்காக சிந்தியா பெர்கின்ஸ் 41 ஆண்டுகள் சிறைத்தண்டனையை தற்போது எதிர்கொள்கிறார்.
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள லிவிங்ஸ்டனைச் சேர்ந்த 36 வயதான சிந்தியா, தற்போது தனது முன்னாள் கணவருக்கு எதிராக சாட்சியம் சொல்ல முடிவெடுத்ததை அடுத்து அவருக்கான தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு தற்போது 41 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்சைட் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட பேஸ்ட்ரிகளை "சீசன்" செய்ய சிந்தியா தனது கணவரின் விந்தணுவைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
டென்ஹாம் ஸ்பிரிங் பகுதியைச் சேர்ந்த இந்த ஜோடி அக்டோபர் 2019 இல் கைது செய்யப்பட்டது மற்றும் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டு ஆபாசப் படங்களை தயாரித்ததாக இந்த ஜோடி மீது 60 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதுதவிர இவர்கள் இரண்டு முதல் நிலை (First degree) பாலியல் வன்புணர்வு வழக்குகளை எதிர்கொண்டனர். அதே நேரத்தில் டென்னிஸ் மீது ஆபாச வீடியோ காட்சிகளை உருவாக்கியது, அதில் பங்கேற்றது ஆகிய பிரிவுகளில் மேலும் நீதியை அளிக்க விடாமல் தடுத்தது ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டன.
டென்னிஸ் அந்த நேரத்தில் லிவிங்ஸ்டன் பாரிஷின் ஷெரிஃபுக்கு அசிஸ்டெண்டாகப் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்,இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு சிந்தியா தனது ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார். அடுத்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். மேலும் குற்றங்களைச் செய்ய டென்னிஸ் தன்னைத் தூண்டியதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு எதிரான 72 குற்றச்சாட்டுகளில் பல குற்றங்களில் தான் நிரபராதி என்று சிந்தியா கூறியிருந்தார்.
ஆனால் இந்த வாரம், அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
வழக்கில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஜெஃப் லாண்ட்ரி கூறுகையில், "அவர் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை தள்ளுபடி செய்யப்பட்டதோடு அல்லாமல் வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவரை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பும் ரத்து செய்யப்பட்டது. இதுபோல எதிர்காலத்தில் டென்னிஸும் அவரது குற்றங்களுக்குப் பொறுப்பேற்பார் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
மேல்முறையீட்டுக்கு முன்பு விண்ணப்பித்திருந்த சிந்தியாவின் மனுவில் அவரும் அவரது முன்னாள் கணவரும் முதலில் இணை பிரதிவாதிகளாக ஆஜராக வேண்டியிருந்தது. அதில் சிந்தியாவுக்கு 72 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அது 41 ஆண்டுகளாகத் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவர் மீதான 68 குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. பரோலுக்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. இதில் கப் கேக்குகள் லேஸ் செய்யப்பட்ட குற்றத்துக்கு மட்டும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.