மேலும் அறிய

வரதட்சணை கொடுமை; கொலை மிரட்டல் - பாமக எம்எல்ஏ குடும்பத்துடன் தலைமறைவு

வரதட்சனை கொடுமை, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அது மட்டுமல்லாமல் கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் தன்னுடைய ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி வருவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் உறுப்பினர் சதாசிவம் அவரது மகன் சங்கர் மனைவி பேபி மகள் கலைவாணி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாமக எம்எல்ஏ தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மகன் சங்கருக்கும் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மனோவியா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பெண் வீட்டார் 5 கோடி ரூபாய் பணம், 25 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், 200 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர். திருமணமான சில மாதங்களிலேயே சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன் சங்கர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள் பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பித்தவுடன் சங்கர் நான் இப்படித்தான் நீ வேண்டுமென்றால் உங்கள் வீட்டிற்கு சென்று விடு என கூறி தாக்கியுள்ளார். 

வரதட்சணை கொடுமை; கொலை மிரட்டல் - பாமக எம்எல்ஏ குடும்பத்துடன் தலைமறைவு

இதனை அடுத்து இச்சம்பவத்தை பெரிது படுத்தாமல் மன வேதனையுடன் சங்கர் உடனே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் நாளுக்கு நாள் சங்கரின் நடவடிக்கை பெண்களை வீட்டுக்கு அழைத்து வரும் வரை வளர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மனோவியாவிடம் அவ்வப்போது நகை, பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சங்கரின் மனைவி இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரும் மாமனாருமான சதாசிவத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஏதும் பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா வீட்டிலிருந்து புறப்பட்டு சர்க்கார் கொல்லப்பட்டியில் வசித்து வரும் அவரது வீட்டிற்கே திரும்பிச் சென்றார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாய் தந்தையிடம் கூறிய மனோவியா சேலம் மாநகர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை சம்பந்தமான புகாரை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர் மனைவி மனோவியாவை மிரட்டும் நோக்கத்தில் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு நீ கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளதாகவும், அதனை வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மீண்டும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மனைவி பேபி மகள் கலைவாணி மகனும் எனது கணவருமான சங்கர் ஆகியோர் என்னிடம் தொடர்ந்து. வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அது மட்டுமல்லாமல் கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் தன்னுடைய ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி வருவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மனைவி பேபி, மகள் கலைவாணி, மகனும் எனது கணவருமான சங்கர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சணை கொடுமை கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget