Crime: 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி..! சக மாணவர்கள் 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு.!
தங்களுடன் பயிலும் சக மாணவியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியில் படிக்கும் சக மாணவியை 4 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். அவருக்கு அந்தப் பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பள்ளிக்கு பிறகு அந்த சிறுமியின் வீட்டில் சேர்ந்து படிப்பதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர்கள் அப்படி பள்ளிக்கு பிறகு படிக்க சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில் அச்சிறுமியின் வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் வீட்டில் அச்சிறுமியின் தங்கை மட்டும் இருந்துள்ளார். அவரை வெளியே விளையாட அனுப்பியுள்ளனர். அதன்பின்னர் அந்த 4 மாணவர்களும் அச்சிறுமியின் கை மற்றும் வாயை கட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது திடீரென அச்சிறுமியின் சகோதரி வீட்டிற்குள் வந்ததால் அந்த நான்கு மாணவர்களும் தப்பி ஓடியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக பெற்றோர்களிடம் தெரிவிக்க கூடாது என்று அச்சிறுமி தன்னுடைய தங்கையிடம் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அச்சிறுமி மற்றும் அவருடைய தங்கைக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இந்தச் சம்பவம் தொடர்பாக தங்கை அவருடைய அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்த அச்சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் 4 மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மனநல ஆலோசனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவர்கள் ஆபாச படங்களை பார்த்து அதில் இருப்பதை நேரில் செய்து பார்க்க துண்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. தன்னுடைன் பயிலும் சக மாணவியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்