Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக்கொலை.. 6 மாத குழந்தையும் விட்டு வைக்காத கொடூர கும்பல்!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் செராய் கிராமத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருக்கும் ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. பின்னர், அந்த வீட்டில் இருந்தவர்களை கத்தியால் குத்திக் கொலை செய்து வீட்டின் முற்றத்தில் தீ வைத்து ஏரித்து உள்ளனர். பின்னர், அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பியோடினர். இதனை அடுத்து, வீட்டில் இருந்து அலறல் சத்தமும், புகையும் வருவதை அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயில் கருகிய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலையானது பழிவாங்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்றும் புனராம்(60), அவரது மனைவி பன்வாரி தேவி (55), மருமகள் தபு (25), 6 மாத குழந்தை மனிஷா ஆகியோர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொடூர கொலை சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தானில் அதிகரித்து வரும் குற்றங்கள் தொடர்பாக அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
#WATCH | Rajasthan: “The Jodhpur police has recovered 4 burnt bodies from a hut in Ramnagar village. Further investigation is underway”: Dharmendra Yadav, Superintendent of Police, Jodhpur Rural pic.twitter.com/0uJxRW2AY7
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 19, 2023
இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷாஜத் ஜெய்ஹிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”அசோக் கெலாட்டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தல் கரௌலியில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஆசிட் வீச்சுக்கு உள்ளார். இதேபோன்று சம்பவங்கள் மாநிலத்தில் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து பிரியங்கா, ராகுல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
Crime: குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: கணவன் உள்ளிட்ட 2 பேர் கைது