மேலும் அறிய

புதுச்சேரியில் ஆன்லைன் வேலை மோசடி: 3 பேரிடம் ரூ. 4.33 லட்சம் அபேஸ்! அதிர்ச்சியில் இளைஞர்கள்...

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் வேலை தேடிய மூன்று நபர்களிடம், ஆசை வார்த்தைகளைக் கூறி சுமார் 4.33 லட்சம் ரூபாயை மோசடி !

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் வேலை தேடிய மூன்று நபர்களிடம், ஆசை வார்த்தைகளைக் கூறி சுமார் 4.33 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பகுதி நேர வேலை என ஆசை வார்த்தை

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இணையதளங்களில் பகுதி நேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், "வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் எளிமையாக வேலை செய்யலாம், அதற்கு கைநிறைய சம்பளம் வழங்கப்படும்" என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

ஆனால், வேலையில் சேருவதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என அந்த நபர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்த இளைஞர், பல்வேறு தவணைகளாக மொத்தம் 4 லட்சத்து 15 ஆயிரத்து 696 ரூபாயை அந்த மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பின், அந்த நபர் தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.

தொடரும் மோசடிகள்

இதே பாணியில் மேலும் இரண்டு நபர்கள் புதுச்சேரியில் ஏமாற்றப்பட்டுள்ளனர், காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 12 ஆயிரத்து 500 ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புதுச்சேரி நபரிடம் 5 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மூன்று நபர்களிடமிருந்தும் 4 லட்சத்து 33 ஆயிரத்து 196 ரூபாய் ஆன்லைன் மோசடி மூலம் சுருட்டப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மர்ம நபர்கள் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை வைத்து அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget