புதுச்சேரி: தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம் - நெல் வியாபாரி உடல் கருகி பலி; கொலையா? விபத்தா?
புதுச்சேரி : தவளக்குப்பம் அருகே இருசக்கர வாகனம் தீப்பிடித்து நெல் வியாபாரி உடல் கருகி பலியானார்.
புதுச்சேரி : தவளக்குப்பம் அருகே இருசக்கர வாகனம் தீப்பிடித்து நெல் வியாபாரி உடல் கருகி பலியானார்.
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65). இவர் நெல் வியாபாரி. இவருக்கு ஆண்டாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள சமாதி பஸ் நிறுத்தம் அருகே வேணுகோபால் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
Nanjil Sampath : "சாதி அரசியல் செய்கிறார் துரை வைகோ" - நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
இதனால் பதற்றம் அடைந்த வேணுகோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது அவர் நிலை தடுமாறு கீழே விழுந்தார். அவர் மீது இரு சக்கர வாகனம் விழுந்து தீப்பற்றிக் கொண்டது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளும் எரிந்து தீக்கிரையாகின. அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தவளக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து, மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
பின்னர், கருகிய நிலையில் இருந்த வேணு கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு வழிப்பறி செய்யும் நோக்கில் வேணு கோபாலை மர்ம நபர்கள் வழிமறித்து கொலை செய்து எரித்தனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
Thangam Thennarasu : ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்