மேலும் அறிய

Crime : ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!

”மகள் காதல் செய்ததை எதிர்த்த தந்தை ஒரு கட்டத்தில் காதலித்து கரம்பிடித்த கணவரான தன்னுடைய மகனையே தீர்த்துக்கட்டியுள்ளார்”

திருவண்ணாமலையில் தன்னுடைய மருமகனையே கூலிப்படையினர் வைத்து பூசாரியான மாமனார் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய மகளின் காதல் பிடிக்காததால் கொலை வெறிகொண்ட தந்தையாக மாறிய பூசாரி மகள் கரம்பிடித்தவரையே தீர்த்துக்கட்டியுள்ளார்.

பூசாரி ஜானகிராமன் - அவரது மகன்
பூசாரி ஜானகிராமன் - அவரது மகன்

மருமகனை தீர்த்துக்கட்டிய மாமனார்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜி வயது (25)இவர் செங்கம் பெங்களூர் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் வெங்கடேஷ்வரா பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ வயது (20) இவருக்கும் விஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறிவந்துள்ளது. இவர்கள் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டிற்கும் தெரியவந்துள்ளது. இதில் விஜியின் வீட்டின் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.  ஆனால், அவர் காதலித்த பெண்ணான ஜெயஸ்ரீ வீட்டில் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

மருமகனை வெட்டுவதற்கு கூலிப்படை தயார் செய்த பூசாரி 

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீயின் தந்தைக்கு இவர்களின் காதல் முற்றிலுமாக பிடிக்காமல், ஜெயஸ்ரீயிடம் விஜியுடன் பழுகுவதை நிறுத்திக்கொள் என கூறியுள்ளார். மேலும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், என்னசெய்வது என்று அறியாமல் இவர்கள் இருவரும் பதிவு திருமணமாக செய்து தனி குடித்தனம் நடத்தி வந்தனர். தற்போது ஜெயஸ்ரீ மூன்று மாத கர்ப்பிணையாக இருந்து வருகிறார். தனது விருப்பம் இல்லாமல் தன்னுடைய மகள் காதல் திருமணம் செய்தது கொண்டது பூசாரி ஜானகிராமனுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில் காதல் திருமணத்தை எதிர்த்து வந்த பூசாரி ஜானகிராமன் தனது மருமகனான விஜி என்பவரை கொலை செய்ய திட்டம்மிட்டுள்ளார். அப்போது ஜானகிராமனின் கோவிலுக்கு வரும் இளைஞர்களான திருமலை, மதி,சிவா ஆகியோரை தனது மகன் ராஜேஷ் உதவியுடன் கூலிப்படையாக தயார் செய்து விஜி மற்றும் ஜெயஸ்ரீ இவர்கள் இருவரும் எங்கே செல்கிறார்கள் என்பது குறித்து நோட்டமிட்டு வந்துள்ளனர். 

மருமகனை கூலிப்படை ஏவி வெட்டிக்கொலை

இந்நிலையில் நேற்று இரவு விஜி பெட்ரோல் பங்கில் வழக்கம்போல வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜியை ஜானகிராமன் தயார் செய்த கூலிப்படை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் விஜி கூச்சலிட்டதை கேட்ட ஊழியர் அரவிந்த சாமி அங்கு தடுக்க ஓடியுள்ளார். அப்போது அரவிந்த்சாமியையும் கூலிப்படையினர வெட்டி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சாய்ந்த விஜியை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், விஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். காயமடைந்த அரவிந்த்சாமி சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றவாளிகளை 12 மணி நேர்த்தில் கைது செய்த காவல்துறை

இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை கைப்பற்றி சிசிடிவி காட்சியில் இருந்தவர்களை குற்றவாளிகள் அடையாளம் கண்டனர். குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் காவல்துறையினர் விஜியின் மாமனாரான பூசாரி ஜானகிராமன் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட இச்சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget