மேலும் அறிய
Advertisement
Mayiladuthurai Pocso arrested: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்த இளைஞர் போக்சாவில் கைது
மயிலாடுதுறையில் சிறுமியை ஏமாற்றி பாலியன் கொடுமை செய்து திருமணம் செய்து கொண்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்து திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் மொழையூரை சேர்ந்த தியாகராஜன் மகன் சிவச்சந்திரன் (23). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர், மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை கடத்தி சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், உடனடியாக கடத்தல் வழக்குப்பதிவு செய்து சிவச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்து அதன் பின் திருமணமும் செய்தது தெரிய வந்தது.
அதனையடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவசந்திரன் மீது குழந்தைகள் திருமணதடைச்சட்டம் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிவசந்திரனை கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். சம்மந்தப்பட்ட சிறுமி ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மீட்ட போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி அவரை பெற்றோரிடத்தில் ஒப்படைப்பதா, அல்லது காப்பாகத்தில் அனுமதிப்பதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion