மேலும் அறிய
Advertisement
கண்டித்தும் தொடர்ந்த கள்ளக்காதல்; மகளை வெட்டி வீசிய தந்தை!
நெல்லையில் கள்ளக்காதலை கண்டித்தும் கேட்காததால், தந்தையே மகளை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் டவுன் அடுத்து அமைந்துள்ள கிருஷ்ணபேரி பகுதியை சேர்ந்தவர் சேர்ம துரை இவருடைய மனைவி இசக்கி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சேர்மதுரை கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் இசக்கி கவிதா இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இசக்கி கவிதாவின் தந்தை மற்றும் அவரது கணவர் இந்த பழக்கத்தை விடுமாறு பலமுறை கேட்டு வந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தங்களின் பழக்கத்தை கைவிட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி சென்று விட்டனர் இந்த நிலையில் இன்று காலை இசக்கி கவிதாவின் வீட்டிற்கு இருவரும் வந்ததாக அவருடைய தந்தையார் மற்றும் கணவருக்கு தகவல் வருகிறது இதனையடுத்து அங்கு வந்த இசக்கி கவிதாவின் தந்தை மற்றும் கணவர் சேர்ம துரை அவருடைய தம்பி ஆகியோர் அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த செய்தியை படிக்க இங்கு கிளிக் செய்க -”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” : நெகிழும் விஜய் ரசிகர்கள்..!
மேலும் இந்த பழக்கத்தை விடுமாறு கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மறுக்கவே ஆத்திரமடைந்த இசக்கி கவிதாவின் தந்தை கையில் வைத்திருந்த ஆயுதத்தால் இருவரையும் வெட்டினார்.
அதனால் அங்கிருந்து இருவரும் தப்பி ஓடுகின்றனர். ஆனாலும் பின்னால் துரத்திச் சென்ற மூவரும் அவர்கள் 2 பேரையும் வெட்டி விட்டு தப்பிச் செல்கின்றனர் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு பேரையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு சேர்மதுரையை கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய அவரது தந்தை மற்றும் சேர்மதுரையின் தம்பியை தேடி வருகின்றனர் . கள்ள காதல் விவகாரத்தில் தந்தையே தனது மகளை வெட்டிய சம்பவம் நெல்லை டவுண் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகள் கொலை செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த நபருக்கும் அவர்களால் அச்சுறுத்தல் இருப்பதால், அவர்களிடமிருந்து சம்மந்தப்பட்ட நபரை காப்பாற்றவும், அதற்கு முன் குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பெற்ற தந்தையே மகளை கொலை செய்த விவகாரம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதங்களுடன் வந்ததை வைத்து பார்க்கும் போது இது திட்டமிட்ட கொலை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. வெளியேறி நாளிலிருந்து மகளை கொலை செய்ய அவரது தந்தை திட்டமிட்டுள்ளார். தகவல் தெரிந்ததும், அதை நிறைவேற்றியுள்ளார்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion