நெல்லை : பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர் அறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு - காவல்துறையினர் தீவிர விசாரணை
மாணவர் முகம்மது அன்சார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? அல்லது மாணவன் உயிரிழப்பில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என தீவிர விசாரணை
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த அப்துல்லா என்பவரது மகன் முகம்மது அன்சார். இவர் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். இவர் தனது சக நண்பர்களுடன் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள வெண்மணி காலனியில் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி பயின்று வருகிறார். இந்த நிலையில் இன்று மாணவன் முகம்மது அன்சார் வீட்டிற்குள் இறந்த நிலையில் கிடந்து உள்ளார்,
இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரிவு காவல்துறையினர் மாணவர் முகமது அன்சார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரோடு அறையில் தங்கியிருக்கும் சக மாணவர்களிடமும், கல்லூரியில் உடன் பயின்று வரும் மாணவர்களிடமும் முகம்மது அன்சார் இறப்பிற்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
மேலும் மாணவர் முகம்மது அன்சார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? அல்லது மாணவன் உயிரிழப்பில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் மாணவர் தான் தங்கியிருக்கும் அறையிலேயே இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.