மேலும் அறிய
Chengalpattu Accident : புத்தாண்டில் கொண்டாட திட்டம்.. அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம்.. மூன்று இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு
நின்று கொண்டிருந்த மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
![Chengalpattu Accident : புத்தாண்டில் கொண்டாட திட்டம்.. அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம்.. மூன்று இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு near chennai accident at chengalpattu district 3 youth died on spot Chengalpattu Accident : புத்தாண்டில் கொண்டாட திட்டம்.. அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம்.. மூன்று இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/680e4c40773660472dc05aa57adacb031672543479293109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சம்பவம் நடைபெற்ற இடம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கரும்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த மூன்று பேர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் /30 , கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி/18 உறவினரின் மகனான 9 ஆம் வகுப்பு படிக்கும் ரிசாத் ஆகியோர் புத்தாண்டை கொண்டாடும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தில், இருந்து திருப்போரூர் நோக்கி மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றுகொண்டிருந்த மினி லாரி மீது மோதியதில் மூவரும் பலத்தகாயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
![Chengalpattu Accident : புத்தாண்டில் கொண்டாட திட்டம்.. அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம்.. மூன்று இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/f6e4785785d6535853bf7585d67e55561672543421140109_original.jpg)
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருப்போரூர் போலீசார் உடல்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினர் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் சென்னையில் உள்ள பல பகுதிகளில் இதுபோன்று எந்தவித விபத்தும் ஏற்படக்கூடாது என தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தபொழுதும் , இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் , அதிவகத்தில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த நிலையிலும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
![Chengalpattu Accident : புத்தாண்டில் கொண்டாட திட்டம்.. அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம்.. மூன்று இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/0c423b25b8ca35f3fb39d57f273ce8551672543456431109_original.jpg)
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்ட பொழுது, மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளனர். அதிவேகத்தில் இருசக்கர வாகனம் வந்தபொழுது எதிரில் நிறுத்தி வைக்கப்பட்ட மினி லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
பட்ஜெட் 2025
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion