மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்கம் கொள்ளை
’’இக்கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர்’’
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சிறுநாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் கஞ்சமலை (65), இவர் விவசாயாம் செய்து வருகின்றார். இவருடைய மனைவி சிவகாமி வயது (60). இவர்களுடைய மகன்கள் ஜெயராமன் (46). முனுசாமி (43) ஆகியோர் குடும்பத்துடன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஜெயராமன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முனுசாமி சென்னையில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கஞ்சமலை, மனைவி சிவகாமியுடன் சிறுநாத்தூர் கிராமத்திலேயே விவசாய நிலத்தில் உள்ள தனது வீட்டில் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, முனுசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநாத்தூர் கிராமத்தில் உள்ள சிவம் நகரில் வீட்டு மனை ஒன்றை வாங்கி அங்கு வீடு கட்டினார். பின்னர் விஷேச நாட்களில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கஞ்சமலை தினமும் தனது மகன் முனுசாமியின் வீட்டிற்கு மாலையில் சென்று மின்விளக்கை போட்டுவிட்டு காலையில் மின்விளக்கை நிறுத்திவிட்டு வருவார். வழக்கம்போல் நேற்று மாலை கஞ்சமலை முனுசாமியின் வீட்டில் மின்விளக்கை போட்டுவிட்டு வீட்டை நன்றாக பூட்டிவிட்டு வந்துள்ளார். பின்னர் காலையில் சென்று மின்விளக்கை அணைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைத்த நிலையில் இருந்ததை கண்டு கஞ்சமலை அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த வீட்டின் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தெரியவந்தது. பின்னர் கஞ்சமலை கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை அடுத்த 2 தினங்களுக்கு, இரவு 12 மணி வரை நீடிப்பு
தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே பீரோவை உடைத்து அதில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் இக்கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து ஆய்வாளர்ள் ரவிச்சந்திரன், ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மளிகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்து சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேவர் குருபூஜையில் வாகனத்தில் குத்தாட்டம்...! - சல்லடைபோட்டு தேடி வழக்குப்பதிவு செய்யும் போலீஸ்...!