மேலும் அறிய

Crime: சிதைந்த முகம்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்.. சாக்கு மூட்டையில் சடலம் - மும்பையில் பயங்கரம்

மும்பையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மும்பையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாக்கு மூட்டையில் சடலம்:

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ஒரு சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. 

மும்பை வடாலாவ் என்ற பகுதியில் மும்பை துறைமுகத்திற்கு செல்லும் ரயில் தண்டவாளத்தில்  மர்மான முறையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.  அதனை பார்த்து சந்தேகப்பட்ட பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்டவாளத்தில் கிடந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது, அதில் பெண் ஒருவரின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. மேலும், அப்பெண்ணின் உடலில் இருந்து ஆடைகள் எரிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து, போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

பெண் கொடூர கொலை:

விசாரணையில், "கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் தெரியாத அளவுக்கு துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். மேலும், முகத்தை முற்றிலுமாக சிதைத்துள்ளனர். உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயது இருக்கும்” என்று தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணின் உடலில் தங்க கம்மல், மோதிரம், வளையல் அப்படியே இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த அடையாளங்களை கொண்டு அப்பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல, மற்றொரு சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. அதனாவது, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்த சீதல் சாவந்த் (29)  என்பவர் கொலை செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இவர்களூக்குள் ஏற்பட்ட சண்டையால், ஆத்திரத்தில் தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

Diwali Special Buses: தீபாவளி சிறப்பு பேருந்துகள்; முன்பதிவு முதல் ஊர் திரும்புவது வரை - முழு விவரம் விரிவாக உள்ளே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
Virat Kohli: அவுட்டாக்குனது ஒரு குத்தமா? சங்வான் மீது கோலி ரசிகர்கள் சைபர் அட்டாக்!
Virat Kohli: அவுட்டாக்குனது ஒரு குத்தமா? சங்வான் மீது கோலி ரசிகர்கள் சைபர் அட்டாக்!
நிர்வாணமாக வீடியோ கால் வரச்சொல்லி மிரட்டிய வாலிபர் - ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்
நிர்வாணமாக வீடியோ கால் வரச்சொல்லி மிரட்டிய வாலிபர் - ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்
CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
அஜித்துடன் விபத்தில் சிக்கிய அனுபவம்...நடிகர் ஆரவ் பகிர்ந்த தகவல்
அஜித்துடன் விபத்தில் சிக்கிய அனுபவம்...நடிகர் ஆரவ் பகிர்ந்த தகவல்
Embed widget