Crime: இளம் பெண்ணிற்கு சமூக வலைதளத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு... பாலியல் வன்கொடுமையில் முடிந்த சோகம்
இளம்பெண் ஒருவரை சமூக வலைதளம் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் ஒருவரை சமூக வலைதளம் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படு நட்பு சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக இந்த நட்பு மற்றும் பழக்கத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளம் சந்தித்த நபர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை திலக் நகர் காவல்நிலையத்தில் 26 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர் சமீபத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கடந்த வாரம் அவரை ஒரு நபர் தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி இந்த இளம் பெண்ணிற்கு சமூக வலைதளம் மூலம் ஒரு நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் நன்றாக பேச தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
அப்போது இந்தப் பெண் தனக்கு உள்ள நிதி நெருக்கடி தொடர்பாக அந்த நபரிடன் கூறியுள்ளார். இவருடைய நிலையை அறிந்த அந்த நபர் இளம் பெண்ணிற்கு உதவுவதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் இருவரும் கடந்த வாரம் நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அப்பெண் அந்த நபரை நேரில் சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவரை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.
அதன்பின்னர் இந்தப் பெண் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் ஏற்பட்டு அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் பெயரில் அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த நபரை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்