Nayanthara Vignesh Shivan Marriage LIVE: நாளை திருப்பதி செல்லும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
Nayanthara Vignesh Shivan Marriage LIVE Updates: நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே முடிந்தது...

Background
Nayanthara Vignesh Shivan Wedding LIVE:
பிரபல நடிகை நயன்தாரா - பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9 அன்று நடைபெறவுள்ளது. நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. இயக்குநர் விக்ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர். இவர்களின் காதல் திருமணம் ஜூன் 9 அன்று மாமல்லபுரத்தில் உள்ள sheraton grand நடைபெறவுள்ளது.
நானும் ரவுடிதான்
நயன்தாராவை முதல் முதலில் விக்னேஷ் சிவன் பார்த்ததே நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு கதை சொல்ல போகும்போதுதான். அதன் பிறகு படப்பிடிப்பில்தான் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி உருவாகி காதலாக மாறியது. ஆனால் அந்த நேரத்தில் அதை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தனர். படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிக்கே அப்போது தெரியாது என்று கூறியிருந்தார். அதனை முதன் முதலில் ஸ்டேஜில் போட்டுக் கொடுத்தது, மன்சூர் அலி கான் தான். பட விழாவில் பேசிய அவர், "உச்சி வெயிலில் நானெல்லாம் நாலு அஞ்சு பிஸ்லேரி பாட்டில காலி பண்ணிட்டு இருப்பேன். அங்க ரெண்டு சிட்டுக் குருவிகள் உக்காந்து மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்கும்" என்று கூற விக்னேஷ் சிவன் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதன் பிறகுதான் கிசு கிசுவெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிங்கப்பூரில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில்தான் கிட்டத்தட்ட இருவரும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் பற்றி பேசிக்கொண்டார்கள். விக்னேஷ் சிவன் சிறந்த இயக்குனர் விருது வாங்கியபோது, நயன்தாராவுக்கு நன்றி சொல்லி, அவரை சிறந்த மனிதர் என்று கூறினார். நயன்தாரா விருது வாங்கும்போதும் விக்னேஷ் சிவனுக்கு நன்றி கூறினார். இருவர் பேசும்போதும் இடைப்பட்ட மிர்ச்சி சிவா, இருவர் காதல் குறித்தும் வெளிப்படையாக கலாய்த்தார். இருவருமே அதனை நல்ல முறையில் எதிர்கொண்டதே இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கு சமமாக பார்க்கப்பட்டது.
கொண்டாட்டங்கள்
நயன்தாரா சமூக வலைத்தளங்களில் இல்லை, ஆனால் விக்னேஷ் சிவன் எப்போதும் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டே இருப்பார். இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி, புகைப்படங்கள் என வந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி ஓணம் கொண்டாடுவது முதல், ஒருவர் மற்றவருடைய பிறந்த நாளுக்கு பிறந்தநாள் பார்ட்டிக்களை அரேஞ் செய்வது என்று அவர்களது கொண்டாட்டங்கள் ஒன்றாக அமைய தொடங்கின.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், அடிக்கடி இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்களுக்கு செல்வதை பழக்கமாக வைத்திருந்தனர்.
நாளை திருப்பதி செல்லும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
திருப்பதியில் நடக்க இருந்த கல்யாணம் மகாபலிபுரத்தில் நடந்ததை தொடர்ந்து நாளை திருப்பதி செல்கின்றனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி. புதுமண ஜோடிகள் இருவரும் நாளை காலை திருப்பதி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளனர்.
ரஜினி தாலி எடுத்து கொடுக்க நடைபெற்ற நயன் - விக்கி கல்யாணம்..!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில், நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.





















