பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் பிறப்புறப்பில் கற்கள், பிளேடை சொருகிக்கொண்ட அதிர்ச்சி! என்ன நடந்தது?
20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதோடு அவரது பிறப்புறுப்பில் பிளேடு, கற்கள் சொருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதோடு அவரது பிறப்புறுப்பில் பிளேடு, கற்கள் சொருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
20 வயது இளம்பெண்ணும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரும் விரார் பகுதியில் உள்ள அர்னாலா கடற்கரைக்குச் சென்று அங்கு இரவைக் கழிக்கத் திட்டமிட்டதாக தெரிகிறது. ஏனென்றால் அந்தப் பெண்ணிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாததால் அவர்களுக்கு ஹோட்டல் அறை கிடைக்கவில்லை என்றும், எனவே, அவர்கள் கடற்கரையில் இரவைக் கழித்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அந்தப் பெண் அங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இரவில் அங்கிருந்துவிட்டு காலை வீடு திரும்புவதற்கு அந்த பெண் பயந்துள்ளார். அதேபோல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை வெளியில் ஒப்புக்கொள்வதை நினைத்தும் பயந்துள்ளார்.
இதையடுத்து இதிலிருந்து தப்பிக்க, அவர் ஒரு அறுவை சிகிச்சையை செய்ய கத்தியை வாங்கியதாக தெரிகிறது. அந்த கத்தியை பிறப்புறப்பில் செருகியதாகவும் கற்களையும் அவரே உள்ளே வைத்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமானதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலிசார் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிந்து பெற்றோர் அடிப்பார்கள் என பயந்து அந்த பெண் அவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அந்த இளம் பெண் தனது குடும்பத்துடன் நலசோபராவில் வசிக்கிறார். மேலும் அந்தப் பெண்ணுக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”அந்தப் பெண் வாரணாசியில் தனது மாமாவின் பராமரிப்பில் வசிக்கும் ஒரு அனாதை என்று கூறிக்கொண்டார். இருவரும் ஞாயிற்றுக்கிழமை மும்பைக்குச் சென்றதாகவும் அவர் கூறினார். 2023 ஆம் ஆண்டு மும்பையின் நிர்மல் நகர் மற்றும் சிவாஜி நகரில் தனது மகள் இரண்டு பாலியல் பலாத்கார புகார்களை எதிர்கொண்டதாக அவரது தந்தை கூறியுள்ளார்” எனத் தெரிவித்தனர்.

