Crime : மோசடி.. திருமணத்துக்கு பொய் வாக்குறுதி.. தெலுங்கு நடிகை பாலியல் வன்கொடுமை.. ஃபிட்னஸ் பயிற்சியாளர் கைது..
நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக உடற்பயிற்சி பயிற்சியாளரை மும்பை போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்தனர்.
நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக உடற்பயிற்சி பயிற்சியாளரை மும்பை போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஆதித்யா அஜய் கபூர், சில தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றிய 24 வயது நடிகையை புறநகர் பாந்த்ராவில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் சந்தித்துள்ளார்.
South Indian film actress rape case: Accused arrested from Mumbai - details inside https://t.co/pXNj9xCES4
— piyush (@piyush22piyu) September 14, 2022
சம்பவத்தை விரிவாக விவரித்துள்ள காவல்துறை அலுவலர், "அப்போது, தொலைபேசி எண்களை அவர்கள் பரிமாறிக்கொண்டு தொடர்பில் இருந்தனர். காலப்போக்கில், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகிவிட்டனர். கபூர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவருடன் பாலியல் உறவை பேணி வந்தார்.
கபூர் கஃபே பரேட் பகுதியில் உள்ள தனது இல்லத்திலும், கோவாவிலும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்தாரர் கூறினார். நடிகை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, தன்னுடன் தொடர்ந்து பாலியல் உறவில் வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், மோசமான வார்த்தைகளில் அவரை திட்டி தாக்கினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரின் தொலைபேசி எண்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொல்லையால் விரக்தியடைந்த அந்த பெண் போலீசை அணுகினார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் முதலில் NM ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அது அவர்களின் அதிகார வரம்பிற்கு வராததால் Cuffe Parade காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. கபூர், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
https://t.co/RPEnOTmnrL
— @zoomtv (@ZoomTV) September 13, 2022
South actress files rape case against fitness trailer, details inside!👇
இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. திருமணம் செய்து கொள்வதாக பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர் கதையாகவே மாறிவிட்டது. இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே இவை குறைய வாய்ப்புண்டு என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துவதுடன், பெண்கள் சுய சிந்தனையுடன், தங்களின் பொருளாதார விடுதலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், வாழ்விற்கான துணையை தேர்வு செய்கையில் அவர்களின் பின்புலத்தை அறியவேண்டுமெனவும் வலியுறுத்துகிறார்கள்