மேலும் அறிய

Crime: இப்படி பண்ணிட்டியேடா.. டிவி சவுண்ட் அதிகரித்து, சுத்தியலால் காதலன் செய்த கொடூரம்.. ஹோட்டல் ரூமில் அதிர்ச்சி

கொலையாளி ஒரு கயிறு மற்றும் ஒரு சுத்தியல் போன்ற பிளம்பிங் கருவியை எடுத்துச் சென்றதால், இரக்கமற்ற முறையில் அவரை கொலை செய்ததால், இது திட்டமிட்ட கொலை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலியை கயிற்றால் கழுத்தை நெரித்து, பிளம்பிங் கருவியால் தலையில் அடித்து காதலன் தப்பிச்சென்ற சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

30 வயதுடைய நபர் ஒருவர் தனது காதலியை முதலில் கயிற்றால் கழுத்தை நெரித்து பின்னர் தலையணையால் நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் ஒரு ஹோட்டல் ரூமில் நடந்துள்ளது. காதலி உயிர் பிழைக்கப் போராடத் தொடங்கியபோது, ​​காதலன் தனது பையில் இருந்து ஒரு பிளம்பிங் கருவியை எடுத்து, இடது காதுக்கு மேல் அவரது தலையில் அடித்ததால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டது. காதலன் தலைமறைவாக இருப்பதால் கொலைக்கான காரணம் தெரியவில்லை.

ஹோட்டல் அறையில் உள்ள படுக்கையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த அறையில் இருந்து ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை மதியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, டிவியில் சவுண்ட் மிக அதிகமாக இருந்ததாகவும், கொலையின் சத்தத்தை மூழ்கடிக்க கொலையாளி சவுண்ட்யை அதிகரித்திருக்கலாம் என்றும் விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

கொலை செய்யப்பட்ட 27 வயதான சயாலி ஷஹாசனே ஒரு கணினி பொறியாளர். குற்றம் சாட்டப்பட்ட சாகர் அருண் நாயக் ஒரு இயந்திர பொறியாளர் ஆவார்.  பெண்னின் தந்தை கூறுகையில், “அவர்கள் இருவரும் வசையில் உள்ள கமானில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென்று என்ன தவறு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.


Crime: இப்படி பண்ணிட்டியேடா.. டிவி சவுண்ட் அதிகரித்து, சுத்தியலால் காதலன் செய்த கொடூரம்.. ஹோட்டல் ரூமில் அதிர்ச்சி

கொலை நடந்த ஹோட்டலின் உரிமையாளர் கூறுகையில், 'இந்த ஜோடி நள்ளிரவில் 208 ரூமிற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். அவர்கள் 7 ஆண்டுகளாக வழக்கமான விருந்தினர்கள். ஒரு முறை வருவார்கள் அல்லது ஒரே இரவில் தங்குவதற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை வருவார்கள். அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களைத் தெரியும். பிப்ரவரி 27ஆம் தேதி இந்த ஜோடி ஒரே அறையில் இருந்தனர். அருண் நாயக் ரூமில்  சில பானங்கள் மற்றும் உணவை ஆர்டர் செய்தார். மாலை 5.30 மணிக்கு, அவர் பில் கேட்டார், மாலை 6 மணிக்கு அவர் கவுண்டரில் இறங்கி, ஒரு ஆப் மூலம் பணம் செலுத்தி விட்டுச் சென்றார். மறுநாள் காலை, ரூமில் இருந்து எந்த அசைவும் இல்லை என்பதை நாங்கள் கவனித்தோம். இரவு முழுவதும் டிவி சவுண்ட் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், இண்டர்காம் அழைப்புகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லை. உடனே, காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம். பின்னர், வந்த போலீசார் மாஸ்டர் சாவியின் உதவியுடன் கதவைத் திறந்தனர். பின்னர் பெண் விருந்தினர் கொல்லப்பட்டதை அறிந்தோம்” என்று கூறினார்.

தப்பியோடிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி ஒரு கயிறு மற்றும் ஒரு சுத்தியல் போன்ற பிளம்பிங் கருவியை எடுத்துச் சென்றதால், இரக்கமற்ற முறையில் அவரை கொலை செய்ததால், இது திட்டமிட்ட கொலை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Embed widget